சென்னை,ஏப். 16 பாஜக அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், திமுக எம்பிக்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் பயன்படுத்தி வரும் கைக்கடிகாரம், தனக்கு வந்து சேர்ந்த விவரம், தனது வீட்டு வாடகை உள் ளிட்ட செலவுகளை தனது நண் பர்கள் ஏற்பதாகவும் பத்திரிகை யாளர்களிடம் தெரிவித்திருந் தார். இது தொடர்பாக தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (15.4.2023) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்ப தாவது: எனது 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 2 முறை சட்டப்பேரவை உறுப்பினராக வும், ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவ ராக இருக்கிறேன். நான், சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் மாதம் ரூ.16 ஆயிரம் வாடகைக்கு குடி யிருக்கிறேன்.ஓர் ஆண்டாக வாடகை கட்டவில்லை என்று தாக்கீது பெறுகிற நிலையில் இருக்கிறேன்.நான்கு ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் ரூபாய் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது? 3 லட்ச ரூபாய் கை கடிகாரம் எப்படி அணிய முடிகிறது? இதற்கு யார் பணம் கொடுக் கிறார்கள்? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண் டும். இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.