கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.2.2026

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி மக்களவைத் தலைவரை பதவி நீக்க நோட்டீஸ்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் தாக்கல்; 120 எம்பிக்கள் கையெழுத்திட்டு ஆதரவு.

* சிறுபான்மையினர் படத்தை நோக்கி துப்பாக்கியால் அசாம் முதலமைச்சர் ஹேமந்த் சர்மா சுடுவது போன்ற காட்சிப் பதிவு குறித்து முதலமைச்சர் ஹேமந்த் மீது நடவடிக்கை எடுக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் இடதுசாரி தலைவர்கள் வழக்கு; உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த ஒப்புதல்.

* தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கும் பெண்கள் 34 சதவீதமாக உயர்வு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘நாடாளுமன்ற ஆய்விலிருந்து பிஎம்.கேர்ஸ் நிதியை தனிமைப்படுத்த முடியாது’: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஜான் பிரிட்டாஸ், எம்.பி. கடிதம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வெளிநாட்டு உயர்மட்ட விசாரணை வேண்டும்: அஜித் பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித் பவார், எம்.எல்.ஏ.,  அடுக்கடுக்கான கேள்வி

தி இந்து:

* ஹிந்துத்துவாவை வலுக்கட்டாயமாகப் பொருத்தாதீர்கள்’: மொழிக்காக போராடுவதை நோய் என்பதா? மொழி குறித்த உணர்வை அவமதித்தால் மோதல் வெடிக்கும்: மொழிப் பிரச்சினை தொடர்பான கருத்துகள் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மீது ராஜ் தாக்கரே கடும் விமர்சனம்.

* அக்னி வீரர்களின் தொழில் முன்னேற்றம் குறித்த கேள்வியை ஒன்றிய அரசு புறக்கணித்தது. அக்னி வீரர்கள் ஆயுதப் படையில் பணியாற்றிய போதிலும், அவர்களின் தொழில் முன்னேற்றத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சகத்திடம் இல்லாமல், ஏன் உள்துறை அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ராகுல் காந்தியின் கேள்விக்கு மழுப்பல் பதில்.

* இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் “ஒருதலைப்பட்சமானது” என்றும், விவசாயிகளின் இழப்பில் இந்தியச் சந்தைகளை அமெரிக்காவிற்குத் திறக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் மக்களவையில் குற்றச்சாட்டு.

* தோழமைக் கட்சிகளுடன் வரும் 22ஆம் தேதி முதல் திமுக தொகுதிப் பங்கீட்டுக்குழு பேச்சுவார்த்தை தொடங்கும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தி டெலிகிராப்:

* பல்கலைக்கழக மானியக் குழுவின் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சமத்துவ விதிகளுக்கு ஆதரவான இயக்கம் வளாகங்களில் வேகம் பெற்று வருகிறது, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதற்கு தலைமை தாங்குகின்றனர்.சமீபத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான சமத சங்கர்ஷ் சமிதி (SSS), பல்கலைக்கழகங்களில் மாணவர் குழுக்களின் போராட்டங்களை ஒருங்கிணைத்து ஊக்குவிக்கிறது.

* இந்தியா-ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறது, அமெரிக்க எரிசக்தி இறக்குமதியை அதிகரிக்கிறது என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கூறுகிறார்; ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 25 சதவீத தண்டனை வரியை நீக்கவும் டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மத்தியப் பிரதேச சட்டக் குழுவில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யுங்கள்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்; ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பெண்களை அரசு வழக்குரைஞர்களாக பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்யுமாறு மத்தியப் பிரதேசத்தின் அட்வகேட் ஜெனரலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கோடீஸ்வரர் சிங் வலியுறுத்தியுள்ளனர்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *