அரியலூர், பிப். 11- அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 8 .2. 2026 ஞாயிறு மாலை 6 மணியளவில் விளாங்குடி மணிகண்டன் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன் தலைமையேற்க, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வி .ஜி. மணிகண்டன் வரவேற்புரை யாற்றினார் .மாநில ப.க அமைப் பாளர் தங்க. சிவமூர்த்தி, மாவட்டச் செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், பொதுக் குழு உறுப்பினர் இரத்தின. இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். .
மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனை செல்வன் ஆகியோர் தஞ்சை மாநில மாநாட்டில் சிறப்பாகவும் எழுச்சியோடும் சீருடை அணிந்து பங்கேற்பது குறித்தும், திராவிடர்கழகத்தின் சிறப்புகள் குறித்தும், இயக்கத்தின் தொடர்பணிகள் குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினர். மாவட்ட இளைஞரணித் தலைவர் லெ. தமிழரசன் நன்றி கூறினார் .
தீர்மானங்கள்
பிப்ரவரி 21ஆம் தேதி தஞ்சையில் இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் மாநில மாநாடு நடத்திட அனுமதி வழங்கிய தமிழர்தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தஞ்சையில் நடைபெறும் மாநில மாநாட்டை விளக்கி அரியலூர் மாவட்டம் முழுவதும் சுவரெழுத்துப் பிரச்சாரம், டிஜிட்டல் பிரச்சாரம் செய்வதென முடிவு செய்யப்படுகிறது.
தஞ்சையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு அரியலூர் மாவட்டத்திலிருந்து தனி வாகனங்களில் பெருந்திரளாக இளைஞர்கள் மாணவர்கள் பங்கேற்பது எனவும் மாநாட்டு பேரணியில் சீருடையோடு சிறப்பாகவும் எழுச்சிகரமாகவும் பங்கேற்க முடிவு செய்யப்படுகிறது.
பாராமெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வு கொண்டுவரும் ஒன்றிய பாஜக அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவத் துணைப் படிப்பிற்கு நீட் தேர்வை கைவிட வேண்டும் என ஒன்றிய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது .
பங்கேற்றோர்
ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன், திருமானூர் ஒன்றிய செயலாளர் பெ.கோபிநாதன், கீழப்பழுவூர் கே.எம்.அன்பரசன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் வெ.இளவரசன் செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா. செல்வக் குமார், வீராக்கன் திராவிட வித்து, பெரியார் பெருந்தொண்டர் பெ.கோ. கோபால், இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் மணிமாறன், ராஜ், சுமித்ரா தேவி, வான்மதி, அக்ஷயா,அபிஷேக் அழகர்சாமி, மாரிமுத்து, ஜன நாயகன், செம்மொழி, கபினேஷ், சரத்குமார், அருண்பாண்டியன், மருத சிவராஜ், செல்வநாதன், ராமச்சந்திரன், பாரதி தாசன், சுப்பிரமணியன், வளர்மதி, ராணி, கமலாதேவி, பொற்கொடி,, விஜயகுமார் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பாக பங்கேற்றனர்.
