டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* “இது மறக்க வேண்டிய பட்ஜெட்..” பாயிண்ட் பாயிண்டாக விமர்சித்த ப சிதம்பரம்! ஒன்றிய அரசு மீது தாக்கு. பொதுத்துறை, தனியார் துறை மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யவில்லை என்று சாடிய அவர், 2025-2026 ஆம் ஆண்டிற்கான மூலதனச் செலவினமும் குறைக்கப்பட்டதாக அவர் சாடினார்.
* ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்காத விவகாரம் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர முடிவு: காங். தலைமையில் எதிர்க் கட்சிகள் அதிரடி
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ராகுல் காந்தி பேச அனுமதி மறுப்பு, மக்களவை மீண்டும் முடங்கியது: பாஜக – எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதம்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மதவாதத்தையும், இறையாண்மை ஆட்சியையும் எதிர்த்துப் போராடுங்கள்: சமஸ்தா மாநாட்டில் முதலமைச்சர் பினராயி விஜயன். ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற கொள்கைக்குப் பின்னால் உள்ள சக்திகளை எதிர்க்க மதச்சார்பற்ற தளங்களை வலுப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் சுட்டிக்காட்டினார்.
தி இந்து:
* ‘உலக நாடுகளோடு போட்டி போடக்கூடிய அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது’, ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட்டில் ரூ.9,000 கோடியில் அமைக்கப்பட்ட டாடா ஆலையில் கார் உற்பத்தியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
* தினமும் 1.30 லட்சம் தூய்மைப் பணியாளருக்கு உணவு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொலிவாக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் முதலமைச்சரால் தொடங்கப்பட்ட இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம், 24 மாநகராட்சிகளில் உள்ள 48,768 பணியாளர்கள், 145 நகராட்சிகளில் உள்ள 29,556 பணியாளர்கள் மற்றும் 479 பேரூராட்சிகளில் உள்ள 21,910 பணியாளர்கள் பயனடைவார்கள்.
தி டெலிகிராப்:
* நீக்கப்பட்ட துப்பாக்கி காட்சிப் பதிவு தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா மீது ஒவைசி காவல் நிலையத்தில் புகார். ‘எக்ஸ்’ தளத்தில் அசாம் பாஜக-வால் பதிவிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட அந்த காட்சிப் பதிவில், ஹிமந்தா பிஸ்வா ஒரு துப்பாக்கியால் குறி வைத்து, ஒரு குல்லா அணிந்தவர் மற்றும் தாடி வைத்திருந்த மற்றொருவர் என இரண்டு நபர்களை நோக்கிச் சுடுவது போலவும், “மிக அருகில் இருந்து சுடப்பட்டது” என்ற தலைப்புடனும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
– குடந்தை கருணா
