வல்லம், பிப்.10- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மண்டல அளவில் நடைபெற்ற கைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் (கேம்ஸ்) இரண்டாம் இடம் பிடித்து இப்பாலிடெக்னிக்கு பெருமை சேர்த்தனர்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் உடல்நலம் மற்றும் ஆளுமை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாக பங்குபெற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியானது Inter Polytechnic Athletic Association (IPAA) பாலிடெக்னிக் மாணவர்களிடையே கைப்பந்து விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் உன்னத நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் கைப்பந்து விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றது.
தஞ்சை மண்டல பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கே இடையேயான Inter Polytechnic Athletic Association (IPAA) நடத்தும் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியானது பட்டுக்கோட்டையில் ஆவணத்திலுள்ள டாக்டர். கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் 30.01.2026 அன்று நடைபெற்றது. இதில் தஞ்சாவூரில் மண்டல அளவிலான 15 பாலிடெக்னிக் அணிகள் பங்கு பெற்றது. இதில் வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்களின் அணி இரண்டாம் இடம் பிடித்தது.
எம்.ஒய்.முகமது இம்ரான்-III/மெக்., வி.பிரகதீஸ்வரன்-II/மெக்., ஜெ.ஷியாம் சூர்யா-I/சிவில், சி.ரீபன் அல்போன்ஸ்- I/சிவில், பி.கவின்-III/மெக்., ஆர்.சுதன்-III/மெக்., எ.விக்னேஸ்-I/EEE, பி.ஹேமநாதன்-I/EEE, எஸ்.தனன்ஜெய்-I/EEE, யு.உதயகுமார்-II/மெக்., பி.தீனதயாளன்-II/EEE, டி.அபிஷேக், II/EEE, எ.அந்தோணி ராஜ்,I/CT, வி.ஆன்ரௌன்வில்மின் ராஜ், I/CT, எம்.கேசவராஜீ-I/சிவில் ஆகிய மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர்.
மேலும் இக்கல்லூரி யின் உடற்கல்வி இயக்குநர் டாக்டர். ஆர்.ஜி.கிரிதர பிரசாத் கலந்து கொண்டு மாணவர்களை ஒருங் கிணைத்தார். பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர் ஜி.இராஜாராமன் மற்றும் பேராசிரியர்கள் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.
