முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஜூனில் கலந்தாய்வு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

 சென்னை, ஏப். 17-  வருகிற ஜூன் மாதத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தனி கலந்தாய்வை நடத்த இருப்பதாக அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளில் சேருவதற்கு டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் சேர்க்கை என்று அழைக்கப்படும் ‘சீட்டா’ நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்தியது. இந்த தேர்வை 4,350 பேர் எழுதினர். இவர் களுக்கான தேர்வு முடிவும் வெளியானது. அய்.அய்.டி., என்.அய்.டி.களுக்கு இணையாக அண்ணா பல்கலைக்கழக துறைகள் முதுநிலை படிப்புகளை வழங்கி வருகின்றன.

இருப்பினும் இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை (கவுன்சலிங்) தாமதமாக நடத்தப்படுவதால், என்.அய்.டி. மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்ந்து விடுகின்றனர். இதனால் அண்ணா பல்கலைக் கழகம், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை படிப்பு களில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. 

 மேலும் சுயநிதி கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.அய்.சி.டி.இ.) அனுமதி கிடைப்பதில் தாமதமாவதால் செப்டம்பர் மாதத்துக்கு மாணவர் சேர்க்கை தள்ளிப்போகிறது. இதற்கு ஒரு தீர்வாக இந்த ஆண்டு முன் கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த அண்ணா பல்கலைக் கழகம் திட்டமிட்டு இருப்பதாகவும், அதன்படி, வருகிற ஜூன் மாதத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தனி கலந்தாய்வை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *