சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை தாக்கீது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவனந்தபுரம், பிப்.9 கேரள சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை தாக்கீது அனுப்பி உள்ளது.

சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் சபரிமலை தங்கக் கவசங்களை வைத்து பூஜை நடத்தியதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. மேலும் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.

சிறப்புப் புலனாய்வுப் பிரிவு இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு வழக்குகளிலும் உன்னிகிருஷ்ணன் போத்தி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மேனாள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகளான முராரி பாபு, சுதீஷ்குமார் மற்றும் சிறீகுமார், உன்னிகிருஷ்ணன் போத்தி ஆகிய 4 பேருக்கு பிணை கிடைத்தது. பிணை பெற்ற 4 பேரிடமும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. இதற்கிடையே சபரிமலை வழக்கில் நடிகர் ஜெயராம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த சில நாட்களில் அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராவார் என்று தெரிகிறது. ஏற்கனவே கேரள காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு சென்னையில் வைத்து நடிகர் ஜெயராமையும் விசாரித்தது. நடிகர் ஜெயராம் மற்றும் உன்னிகிருஷ்ணன் போத்தி இணைந்து பூஜை செய்யும் காட்சிப் பதிவுதான் நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்தியதற்கு அடிப்படை காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *