அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்களின் தாயாரும், தமிழ்நாடு ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் மு.சேவுகபாண்டியன் மனைவியுமான சே.முத்துச்சரம் அவர்கள் இயற்கை எய்தினார். திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மாவட்ட செயலாளர் இராலீ.சுரேஷ் மாவட்ட துணை தலைவர் நா.முருகேசன், பக அமைப்பாளர் பா.சடகோபன் கழக பேச்சாளர் அ.வேல்முருகன்,கிளைகழக செயலாளர் இரா.அழகுப்பாண்டி ஆகியோர் மறைந்த தாயார் அவர்களுக்கு மாலை அணிவித்து சே.பசும்பொன் பாண்டியன் அவர்களிடம் இரங்கல் தெரிவித்தனர்.
குத்தாலம் சின்னப்பிள்ளை மறைவு
கழகத் தோழர்கள் மாலை வைத்து மரியாதை

திராவிட முன்னேற்ற கழக உயர் மட்ட செயல் திட்ட உறுப்பினரும், மேனாள் சட்ட மன்ற உறுப்பினருமாகிய குத்தாலம் பி.கல்யாணம் அவர்களின் இளைய சகோதரர் சின்னப்பிள்ளை (எ) சந்திரசேகரன் 3.2.2026 அன்று இயற்கையெய்தினார். அன்னாரது உடலுக்கு 04.02.2026 காலை 10.30 மணியளவில் மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன். கழக காப்பாளர் சா. முருகையன், கி.தளபதிராஜ், மாவட்டச் செயலாளர் கு. இளமாறன், மாவட்ட துணைத்தலைவர் ஞான. வள்ளுவன், மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி.முத்து, நகர செயலாளர் பூ.சி.காமராஜ், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் அ.சாமிதுரை பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் இரெ.செல்லதுரை குத்தாலம் ஒன்றிய விவசாய அணிச்செயலாளர் கு.இளஞ்செழியன், மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
