வல்லம், பிப்.8–- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திர வியல் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள், கும்பகோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 28.01.2026 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கு (National level Technical Symposium) நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தொழில்நுட்ப கட்டுரை வாசித்தலில் (Technical Paper Presentation) இயந்திரவியல் துறை மாணவர் செல்வன்
எஸ்.டி.அரிஹரன் “Precision Agriculture in Mechanical System” என்ற தலைப்பில் முதல் பரிசை பெற்றுள்ளார்.
மேலும் “திட்ட விளக்க காட்சி” (Project Presentation) என்ற போட்டியில் இயந்திரவியல் துறை மாணவர்கள் செல்வன் எஸ்.பிரதீப், எஸ்.சச்சின், எல்.அவினாஷ் ஆகியோர் “Mini CNC Plotter” என்ற தலைப்பில் முதல் பரிசும் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் செல்வன் ஆர்.வெற்றிச் செல்வன், சி.குபேந்திரன் ஆகியோர் “Automatic Waste Segregation System” இரண்டாம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் வழங்கப்பட்டது.
பாராட்டுச் சான்றிதழ்களும் மற்றும் ரொக்கப் பரிசுகளும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர் கோ.இராஜாராமன் மற்றும் துறைத் தலைவர்கள் பாராட்டினார்கள்.
