கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.2.2026

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* “கொள்கையின் முக்கியத்துவம் குறித்து இளைஞர் அணி தோழர்களுக்கு எடுத்துரைப்பேன். எதற்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்பதை விருதுநகர் மாநாட்டில் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்’ என விருதுநகரில் நடைபெறும் இளைஞரணி தென் மண்டல மாநாட்டில் பங்கேற்க திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

* ‘தமிழ்நாட்டை பல வகையில் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது’- முரட்டு அடிமையாக இருக்கிறார் எடப்பாடி: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றம்!!

* கேள்விகளுக்கு பதில் அளிக்கும் தைரியம் பிரதமர் மோடியிடம் இல்லை, மல்லிகார்ஜூன கார்கே தாக்கு.

* நீட் முதுகலை கட் ஆப் மதிப்பெண் குறைப்பிற்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வேகமின்றி ஓடும் மோடி அரசின் ‘சூப்பர்பாஸ்ட் ரயில்கள்’: இந்திய ரயில்வேயின் 478 சூப்பர் பாஸ்ட் ரயில்களில், 123 ரயில்களின் திட்டமிடப்பட்ட வேகம் மணிக்கு 55 கிலோமீட்டருக்கும் குறைவாக இருப்பதாக நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. ‘சூப்பர் பாஸ்ட் ரயில்’ அளவுகோலை மறுஆய்வு செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அஜித் பவாரின் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதா? உயர்மட்ட விசாரணைக்கு என்சிபி-எஸ்பி தலைவர் பஜ்ரங் சோனாவானே கோரிக்கை. விமானம் தரை இறங்குவதற்கு முன்பு ஏற்பட்ட வெடிப்பு, விமானத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பது போன்ற அசாதாரணமான ஒன்று இருந்தால்தான் நடந்திருக்க முடியும் என பஜ்ரங் சோனாவானே குற்றச்சாட்டு.

* வருமான வரி ஏய்ப்பில் விஜய்க்கு விதித்த அபராதம் கட்ட வேண்டும்: ரூ.1.50 கோடி வருமான வரி அபராதத்திற்கு எதிரான டி.வி.கே. தலைவர் விஜய்யின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

தி இந்து:

* 2024 முதல் தேசிய சிறுபான்மையினர் ஆணைய பணியிடங்கள் காலி: ’எப்போது நிரப்புவீர்கள்? முறையான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுங்கள்’, ஒன்றிய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

* ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை இந்தியா முழுவதும் குறைந்தபட்சம் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஒரு விதியைச் சேர்ப்பதற்காக, 1948 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய, கேரள நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ் பீரன் மாநிலங்களவையில் ஒரு தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

தி டெலிகிராப்:

* “எப்ஸ்டீன் வர்க்கத்தினரை பொறுப்பேற்க வைக்க அமெரிக்கா என்ன செய்து கொண்டிருந்தது? இந்த சக்திவாய்ந்த மனிதர்களை நாம் நாடாளுமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். பிரிட்டன் ஒரு இளவரசரை பதவியில் இருந்து நீக்கியது, மாண்டல்சனை பதவி விலகல் செய்ய கட்டாயப்படுத்தியது, மற்றும் ஸ்டார்மர் மீது நம்பிக்கையை இழந்தது,” கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினர் கன்னா கேள்வி.

* அசாம் முதல்வர் ஹிமந்தாவின் ‘வெறுப்புப் பேச்சு’ கருத்துகள் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட முக்கிய குடிமக்கள், அஸ்ஸாம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை

டைம்ஸ் ஆப் இந்தியா:

* இந்தியா, அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்த கட்டமைப்புக்கு ஒப்புதல்:இந்தக் கட்டமைப்பின் கீழ், அனைத்து அமெரிக்கத் தொழில்துறை பொருட்கள் மற்றும் பரந்த அளவிலான அமெரிக்க உணவு மற்றும் விவசாய பொருட்களுக்கான வரிகளை நீக்கவோ அல்லது கணிசமாகக் குறைக்கவோ இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *