சென்னை, நவ.6 – தமிழ்நாடு முழு வதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கி உள் ளது.
தென் தமிழ்நாட்டின் பெரும் பாலான இடங்களிலும், வட தமிழ்நாட்டு கடலோர மாவட்டங் களிலும் அநேக இடங்களில் மித மான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. பருவமழை பாதிப்புகளை கண்காணிக்க ஒவ் வொரு மாவட்ட நிர்வாகம் சார் பில் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் மீண்டும் வருகிற 8-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கேரளா மற் றும் தமிழ்நாட்டில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் கணித்துள்ளது.