தஞ்சை உட்பட 10 மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று உரை

8 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பிப். 21இல் தஞ்சையில் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக, திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாநில மாநாடு, திராவிடர் எழுச்சிப் பேரணியை சிறப்பாக நடத்துவோம்

தஞ்சை, பிப். 4- தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், இலால்குடி, திருச்சி மாவட்டங்களின் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 31.1.2026 சனி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தஞ்சாவூர் கீழராஜ வீதி பெரியார் இல்லத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

தொடக்கத்தில் கடவுள் மறுப்பு கூறியும், வருகைதந்த அனைவரையும் வரவேற்றும் தஞ்சை மாநகரத் தலைவர் செ.தமிழ்செல்வன் உரையாற்றினார்.

இரா.ஜெயக்குமார் தொடக்கவுரை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அணுகுமுறை, உழைப்பு, வழிகாட்டுதல் இயக்கத்திற்கும், கழகத் தோழர்களுக்கும் மரியாதையை பெற்றுத் தந்துள்ளது. 93 வயதிலும் இயக்கத்தையும், இனத்தையும் வழிநடத்தக்கூடிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நமது டெல்டா மாவட்டங்களை நம்பி குறுகிய காலத்தில் இருபெரும் மாநாடுகளை அறிவித்துள்ளார்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட உழைப்பை நல்க வேண்டும். உடனடியாக நாடெங்கும் சுவர் எழுத்து விளம்பரத்தைத் தொடங்க வேண்டும என கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தனது தொடக்கவுரையில் குறிப்பிட்டார்.

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் நன்கொடை வழங்கல்
கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்களிடம் சால்வைக்கு பதில் நன்கொடை மற்றும் விடுதலை சந்தாக்கள் வழங்கினர். விவரம் வருமாறு:
1. மு.அய்யனார், தஞ்சை மாவட்ட காப்பாளர் ரூ.1000
2. அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட செயலாளர் ரூ. 200
3. சோழபுரம் மதியழகன், ரூ.200
4. அருண்காந்தி, திருவாரூர் மாவட்ட கழகத் தலைவர், ரூ.500
5. ச.கண்ணன், திருவையாறு ஒன்றிய தலைவர் ரூ.200
6. செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர தலைவர் ரூ.200
7. ஞா.ஆரோக்கியராஜ், திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ரூ.500
8. வை.இளங்கோவன், குடந்தை மாவட்ட காப்பாளர் ரூ.200
9. நெய்வேலி வெ.ஞானசேகரன் ரூ.200
10. கணபதி அக்ரகாரம், மணி மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர், சேகர் ரூ.500
11. இரா.வீரக்குமார், தஞ்சை மாநகர செயலாளர் ரூ.500
12. இரா.செந்தூரப்பாண்டியன், மாணவர் கழக மாநில செயலாளர் ரூ.100
13. சந்துரு, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ரூ.500
14. கவிஞர் பகுத்தறிவு தாசன், தஞ்சை மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் ரூ.1000
15. கழகத் தோழர் ரூ.100
16. அத்திவெட்டி பெ.வீரையன், இரண்டு அரையாண்டு விடுதலை சந்தா ரூ.1800

தொடர்ந்து தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், பட்டுக்ேகாட்டை மாவட்ட காப்பாளர் பெ.வீரையன், மன்னார்குடி மாவட்ட கழகத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், நாகை மாவட்டக் கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், கும்பகோணம் மாவட்ட கழகத் தலைவர் கு.நிம்மதி, திருவாரூர் மாவட்டக் கழகத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, அரியலூர் மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகம், திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், லால்குடி மாவட்ட கழகத் தலைவர் முனைவர் வீ.அன்புராஜா, தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மன்னார்குடி மாவட்டச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, கும்பகோணம் மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, திருவாரூர் மாவட்டச் செயலாளர் சவு.சுரேஷ், அரியலூர் மாவட்டச் செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், நாகப்படினம் மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஷ்குப்தா, தஞ்சை மாவட்ட மகளிரணி தலைவர் கலைச்செல்வி, தஞ்சை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.அஞ்சுகம், நாகை மவட்ட மகளிரணி தலைவர் அலமேலு, நாகை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கவிதா, கும்பகோணம் மாவட்ட மகளிரணி தலைவர் திரிபுரசுந்தரி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் இரா.வெற்றிக்குமார், அ.ஜெ.உமாநாத், மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் அறிவுச்சுடர், மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர் வீ.மோகன் ஆகியோர் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திட அனைவரும் ஒன்றிணைந்து போர்க் கால  அடிப்படையில் செயலாற்றுவோம் என உரையாற்றினர்.

ச.சந்துரு – அஞ்சுகம் மணநாள் பாராட்டு

28ஆவது திருமண நாளை (1.2.2026)  கொண்டாடும் மாவட்ட தொழிலாளரணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.அஞ்சுகம் ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

மாநாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாட்டுக் குழுவை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அறிவித்தார்.

கழக இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி தீர்மானங்களை வாசித்தார்.

முனைவர் வீ.அன்புராஜ் தலைமை உரை

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ. அன்புராஜ் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எதை அறிவித்தாலும் காரணத்தோடுதான் அறிவிப்பார்கள். 70 நாட்களில் 36 கூட்டங்களை ஆசிரியர் அவர்கள் முடித்துள்ளார்கள். பிப்ரவரி 14ஆம் தேதியுடன் 46 கூட்டங்களை நிறைவு செய்கிறார் அவருக்கு வயது 93.

மகளிர், மாணவர்கள், இளைஞர்கள் தனித்தனியாக ஊர்வலத்தில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வண்டும். திராவிடர் எழுச்சிப் பேரணி மிகச் சிறப்பாக அமைய வேண்டும். டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் பெரியார் உலகத்திற்கு பெருவாரியான நிதியை தந்துள்ளீர்கள். தஞ்சையில் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. தொடர்ந்து பணியாற்றுவோம் –  வெற்றி பெறுவோம்  – மாநாட்டில் சந்திப்போம் என கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

வருகை தந்த மாவட்டப் பொறுப்பாளர்களிடம் மாநாட்டு துண்டறிக்கையை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் வழங்கினார்.

முனைவர் பட்டம் பெற்றமைக்குப் பாராட்டு

அண்மையில் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை மற்றும் சால்வைக்கு பதிலாக நன்கொடைகளை வழங்கி மகிழ்ந்தனர்.

இறுதியாக மாநாகர செயலாளர் இரா.வீரக்குமார் நன்றி கூறினார்.

கூட்டத்தில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, வழக்குரைஞரணி, தொழிலாளரணி மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளைப் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

தீர்மானங்கள்

தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பழகன் அவர்களின் சகோதரர் முத்தையா, திருவையாறு ஒன்றிய  தலைவர் ச.கண்ணன் தந்தையார் சோ.சச்சிதானந்தம் (வயது 100) மாத்தூர் முனியப்பன், திருவையாறு ஒன்றிய அமைப்பாளர் மு.விவேகவிரும்பி ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

21.2.2026 அன்று தஞ்சையில் திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை மாநில மாநாடு – திராவிட எழுச்சிப் பேரணி – திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டை நடத்துவதற்கு வாய்ப்பளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

இருபெரும் மாநாடுகளை தஞ்சையில் மிக எழுச்சியுடன் நடத்தட கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிதி வசூல், சுவர் எழுத்துப் பணி, பிரச்சாரப் பணி அனைத்தையும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் தொடங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

பிப்ரவரி 21இல் தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை மாநில மாநாடு, திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழக மாநில மாநாடு ஏற்பாட்டுக் குழு விவரம் வருமாறு:

ஒருங்கிணைப்பாளர்கள்

வீ.அன்புராஜ், கழக பொதுச் செயலாளர்

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

இரா.குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக துணைப் பொதுச் செயலாளர்

சே.மெ.மதிவதனி, கழக துணைப் பொதுச் செயலாளர்

தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிரணி செயலாளர்

பா.மணியம்மை, மாநில மகளிர் பாசறை செயலாளர்

நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணி செயலாளர்

சோ.சுரேஷ், மாநில இளைஞரணி இணைச் செயலாளர்

இரா.செந்தூரபாண்டியன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்

மு.இளமாறன், திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர்

ஏற்பாட்டுக்குழு

தலைவர் – சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்

செயலாளர் – அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட செயலாளர்

பொருளாளர் – மு.அய்யனார், தஞ்சை மாவட்டக கழகக் காப்பாளர்

துணைத் தலைவர்கள்

மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னார்குடி மாவட்ட கழகத் தலைவர்), வை.சிதம்பரம் (பட்டுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர்), பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்ட கழகக் காப்பாளர்),  கு.நிம்மதி (கும்பகோணம் மாவட்ட கழகத் தலைவர்), எஸ்எஸ்எம்கே அருண்காந்தி (திருவாரூர் மாவட்ட கழகத் தலைவர்), ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட கழகத் தலைவர்), வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகப்பட்டினம் மாவட்ட கழகச் செயலாளர்), விடுதலை நீலமேகம் (அரியலூர் மாவட்ட கழகத் தலைவர்), ஆ.ச.குணசேகரன் (மயிலாடுதுறை மாவட்ட கழகத் தலைவர்), முனைவர் வீ.அன்புராஜா (லால்குடி மாவட்ட கழகத் தலைவர்), செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகர கழகத் தலைவர்), ஆ.பிரகாஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்), அ.கலைச்செல்வி (மாவட்ட மகளிரணி தலைவர்), க.சிந்தனை அரசு (மாவட்ட மாணவர் கழக தலைவர்)

துணைச் செயலாளர்கள்

கா.தென்னவன் (பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மன்னார்குடி மாவட்டச் செயலாளர்), சவு.சுரேஷ் (திருவாரூர் மாவட்டச் செயலாளர்), ஜெ.புபேஷ்குப்தா (நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர்), சு.துரைராசு (கும்பகோணம் மாவட்டச் செயலாளர்), மு.கோபாலகிருஷ்ணன் (அரியலூர் மாவட்டச் செயலாளர்), மகாமணி (திருச்சி மாவட்டச் செயலாளர்), கு.இளமாறன் (மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர்), ஆ.அங்கமுத்து (லால்குடி மாவட்டச் செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), அம்பிகா கணேசன் (மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர்), அறிவுச்சுடர் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்), அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.வீரக்குமார் (தஞ்சை மாநகரச் செயலாளர்), க.அன்பழகன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), இரா.மகேந்திரன் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்), ச.அஞ்சுகம் (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்).

மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாநகர, நகரத் தலைவர்கள், செயலா ளர்கள் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

தஞ்சையில் 21.02.2026 நடைபெறவிருக்கும் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக,
திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாநில மாநாடு – கலந்துரையாடல் 

மாவட்ட கழகத்தின் சார்பில் மாநாட்டிற்கு பங்களிப்பு

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *