காரைக்குடி, ஜன.30 சாம, தான, தண்ட, பேதத்தை பயன்படுத்துவது தான் பா.ஜ.க.வின் பழக்கம் என்று ஒன்றிய அரசின் மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
நேற்று (29.1.2026) காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித் ப.சிதம்பரம் கூறுகையில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா.மாங்குடி தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அரசு சட்டக்கல்லூரி, அரசு வேளாண்மைக் கல்லூரி ஆகியவற்றின் பணிகள் நிறை வடைந்து அதன் புதிய வளாகங்கள், மாணவர்கள் தங்கும் விடுதி ஆகிய வற்றை திறந்து வைக்க
காரைக்குடி வருகை தரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா.மாங்குடி ஆகியோருக்கும் தொகுதி மக்களின் சார்பாகவும், காங்கிரசு கட்சி யின் சார்பாகவும் எங்களது மன மார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கி றோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிவகங்கை மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரியை வழங்கினார்கள். இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டக்கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரியை வழங்கியுள்ளார்கள். எனவே, சிவகங்கை மாவட்டம் உயர்கல்வியில் தன்நிறைவு பெற்ற மாவட்டமாகத் திகழ்வது எங்களுக்கெல்லாம் பெரு மையளிக்கிறது. குறிப்பாக
சட்டக்கல்லூரி மற்றும் வேளாண்மை கல்லூரியில், பெண்கள் அதிக அளவில் சேர்வது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
பி.ஜே.பி. மற்ற கட்சிகளை மிரட்டி கூட்டணிக்கு அடி பணிய வைக்கி றார்களா? என்று செய்தியா ளர்கள் கேட்டதற்கு,
ஆம்! அதுதானே அவர்களுடைய பழக்கம். எல்லா மாநிலத்திலும் அதுதான் அவர்களின் பழக்கம். அதற்கு மகாராட்டிரா சிறந்த உதாரணம்.
கட்சியை உடைப்பது. உடைந்த கட்சியில் ஒரு பிரிவை சேர்ப்பது.
அதற்கு சாம, தான, தண்ட, பேதத்தைப் பயன்படுத்துவது. அது தான் அவர்களுடைய பழக்கம். – இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா.மாங்குடி, மாவட்ட காங்கிரசு கட்சி தலைவர் எம்.சஞ்சய் காந்தி, நகர தலைவர் மெ.சண்முகதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
