தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
இன்று (30.1.2026) ‘நாட்டுத் தந்தை’ என்று வெகுமக்கள் பலராலும் கொண்டாடப்படும் அண்ணல் காந்தியாரின் 79 ஆவது நினைவு நாள்!
இது வெறும் நினைவு நாள் மட்டுமல்ல; மத வெறிக்கு அவர் பலியான நாள்.
மனித நேயத்தையும், சமூக நல்லுறவையும் விரும்பியவர்.
மதவெறி அரசியல் வளையத்திற்குள் இந்திய நாட்டையே
கொண்டு வரத் துடிக்கிறார்கள்!
கொண்டு வரத் துடிக்கிறார்கள்!
மதவெறி காரணமாக காந்தியாரின் உயிரைக் குடித்த உயர்ஜாதியினரான கோட்சேவுக்குப் பயிற்சி அளித்த அதே ஆர்.எஸ்.எஸ்., இன்றும் அது பல்வகை தந்திர, ஆரிய சூழ்ச்சி, வியூகங்களால், பன் மதங்கள், பல மொழிகள், பல நாகரிகக் கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவை ஒழித்து, ஒரே மதம் (ஹிந்து மதம்), ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே கலாச்சாரம் (ஆரிய சமஸ்கிருத கலாச்சாரம்) என்று மாற்றிட, அனைத்து முயற்சிகளையும் சட்டப்பூர்வமாகவும், சட்டங்களுக்கு அப்பாற்பட்டும், வெகு மும்முரமாக ஜனநாயகத்திற்கு விடை கொடுத்து, ஒற்றை (அதிபர்) ஆட்சிமூலம் தங்களது மதவெறி அரசியல் வளையத்திற்குள் இந்திய நாட்டையே கொண்டு வரத் துடித்து வேக வேகமாக செயல்படும் போக்கு எதார்த்தமாகத் தெரிகிறது!
அனைத்து அரசியல் அங்கங்களையும் காவி மயமாகுவது – ஒன்றிய அரசின் அன்றாடப் பணியாகி வருகிறது!
அண்ணல் காந்தியார் பெயர்கூட, கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திலிருந்து அகற்றப்பட்டு, ‘ராம்ஜி’கள் அந்த இடத்தில் ஆதிக்கம் செலுத்தத் துணிந்துவிட்டனர்!
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மைச் சமு தாய மக்கள் நிலையோ மிக மிகப் பரிதாபத்திற்குரியதாக உள்ளது!
‘‘மதவெறி மாய்த்து –
மனிதநேயம் காப்போம்!’’
மனிதநேயம் காப்போம்!’’
எனவே, இந்நாளில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒரே உறுதிமொழி, ‘‘மதவெறி மாய்த்து – மனிதநேயம் காப்போம்’’ என்பதே!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.1.2026
