டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகாரில் நடைபெற்ற வாக்காளர் சிறப்புத் திருத்தத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
* ஜாதியப் பாகுபாடுகளைக் களைய யு.ஜி.சி-யின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்காலத் தடை: உச்சநீதிமன்ற உத்தரவு பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், சமூக மற்றும் கல்வியில் அடிப்படையில் பின் தங்கியவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களுக்கு எதிராக நடைபெறும் பாகுபாட்டை ஒழிக்கும் வகையில் ‘‘சமத்துவ மேம்பாட்டு வழிமுறை 2026” என்ற புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது.
* விமான விபத்தில் பலியான மகாராட்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் பதவியை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்க வலியுறுத்தல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் திருத்தம்: ‘தர்க்க ரீதியான முரண்பாடுகள்’ காரணமாக நீக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
* மோடியின் டபுள் என்ஜின் சர்க்கார் லட்சணம்: உத்தர காண்டின் விகாஸ் நகரில் காஷ்மீர் வியாபாரிகள் கொடூரமாக தாக்கப்பட்டதால் பதற்றம்; ஒருவர் கைது. சிறுபான்மையினரை இலக்கு வைத்து நடத்தப்படும் துன்புறுத்தல் என்று உள்ளூர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
– குடந்தை கருணா
