அமராவதி, ஜன.29 ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா டில்லியில் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் (100 நாள்) பெயரை ஒன்றிய அரசு மாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 2ஆம் தேதி இந்த திட்டத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராஜசேகர ரெட்டி ஆகியோர் ஆந்திராவில் தொடங்கி வைத்தனர்.
ஆதலால், அதே நாளில் ஆந்திராவில் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசிய தலைவர் கார்கேவுக்கு அழைப்பு விடுத்தேன். அவர்கள் வர சம்மதம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஷர்மிளா கூறினார்.
