டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இது மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்கும்: திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பேட்டி.
* பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: விபி ஜி ராம் ஜி, எஸ்அய்ஆர் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை.. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மோடியின் டபுள் என்ஜின் சர்க்காரில் லட்சணம்: ம.பி.யில் குடியரசு தின அதிர்ச்சி: மத்தியப் பிரதேசத்தில் மெஹர் மாவட்டத்தில் பட்டிவான் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு கிழிந்த நோட்டுப் புத்தக பக்கங்களில் மதிய உணவு பரிமாறப்பட்டது; இந்தச் சம்பவத்தின் காட்சிப்பதிவு விரைவாக பரவியதைத் தொடர்ந்து பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மூத்த பள்ளி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
தி இந்து:
* வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்த்திட, புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழப்பு, பயணச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று இந்திய ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி டெலிகிராப்:
* 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று இந்தியாவில் வேலைவாய்ப்புக்கு வெளியே இருக்கும் படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் விநாயக் கொல்கத்தாவில் தெரிவித்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது, நலத்திட்டங்கள் பின்வாங்குகின்றன: பொருளாதார நிலை குறித்து காங்கிரஸ் அறிக்கை. ஒரு கவர்ச்சியான சித்திரத்தை முன்வைப்பதற்காக தரவுகளைத் திரித்துக் காட்டுவதாக மோடி அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
