கெய்ரோ, ஜன.27 எகிப்தில், கடந்த 2024ஆம் ஆண்டு அறிக்கையின்படி, அந்நாட்டில் உள்ள 18 வயதுக்குட்பட்ட குழந் தைகளில் 50 சதவீதம் பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதும், மேலும், அவர்கள் எளிதில் இணைய (ஆன்லைன்) ஆபத்தில் சிக்குவதும் தரவுகளில் தெரிய வந்தது.
இதையடுத்து, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் அல் சிசி, குழந்தைகள் சரியான முதிர்ச்சியை அடையும் வரை, அவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப் படுத்தும் சட்டங்கள் குறித்து ஆராயுமாறு எகிப்து அரசுக்கு சமீபத்தில் உத்தரவிட்டார்.
இதையடுத்து, எகிப்திய அரசு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம், அந்நாட்டு நாடாளுமன்றம் குழந்தைகள் நல அமைப்புடன் இணைந்து இது குறித்து ஆய்வு மேற் கொண்டு விரைவில் சட்டமி யற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்ெகனவே, உல களவில் ஆஸ்திரேலியா வில் 16 வயதுக்குட் டோருக்கும், பிரிட்டனில் 15 வயதுக்குட்பட்டோருக்கும் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டுள்ளதை முன்மாதியாக கொண்டு எகிப்திலும் இச்சட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
