கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.1.2026

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஹிந்தித் திணிப்பு ஒரு பண்பாட்டு படையெடுப்பு; “அன்றும் இன்றும் என்றும் ஹிந்திக்கு இங்கே இடமில்லை” – மொழிப்போர்த் தியாகிகள் நாளில் ஸ்டாலின் உறுதி

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தமிழ் நாடு, கேரளா மாநிலங்களில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற முடியாது தலையங்க செய்தி.

* மேற்கு வங்கத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தம் காரணமாக 130 பேர் வரை இறந்த நிலையில்,வாக்காளர் தினம் என தேர்தல் ஆணையம் கொண்டாடுவது, ஒரு சோக கேலிக்கூத்து, மம்தா காட்டம்.

* ஆர்ஜேடி தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி நியமனம்: ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்தது. இதில் ஆர்ஜேடி தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி நியமிக்கப்பட்டார்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ராஜஸ்தானில் சுமார் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது: அம்மோனியம் நைட்ரேட் இதற்கு முன்னர், நவம்பர் 2025இல் டில்லியில் செங்கோட்டை அருகே நடந்த வெடிப்புச் சம்பவம் உட்பட, பல பெரிய குண்டுவெடிப்பு வழக்குகளுடன் தொடர்புடையது.

* தேசபக்தி குறித்து தமிழ்நாட்டிற்குப் பாடம் எடுக்க வேண்டாம்: ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தி. பாஜகவை மறைமுகமாக தாக்கி பேசிய முதலமைச்சர், சர்வாதிகாரப் போக்குகள் மூலம் அரசியலமைப்பின் மாண்பைக் குலைக்க முயல்பவர்களே உண்மையான தேச விரோதிகள் என்று கூறினார்.

தி இந்து:

* புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு சட்டம்: மாநிலங்களின் “நிதிச் சுமையை அதிகரிப்பதற்கு” முன்போ அல்லது பின்போ ஒன்றிய அரசு மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை, கருநாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கண்டனம்.

* கொலிஜியம் அமைப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறி; நீதிபதிகள் இடமாற்றத்தில் ஒன்றிய அரசு தலையீடு: உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கவலையைச் சுட்டிக்காட்டி கேரளா சிபிஅய்(எம்) மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் விமர்சனம்.

* தன்னாட்சி அமைப்புகளால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு சவால்கள்: உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்றுவது தொடர்பான மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கிய சர்ச்சைக்குரிய தீர்ப்பை மேற்கோள் காட்டி, மற்ற நிறுவனங்களை போலவே நீதிமன்றங்களும் அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளை கடைபிடிக்க கடமைப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

* ஒன்றிய அரசு ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைக்கிறது, கூட்டாட்சி அமைப்பை அரித்து வருகிறது: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

தி டெலிகிராப்:

* மேற்கு வங்க அமைச்சர் சஷி பாஞ்சா வாக்காளர் பட்டியலில் பெயர்  நீக்கம்; எஸ்அய்ஆர் நோட்டீஸ். வாக்காளர் பட்டியல் திருத்த செயல்முறை குறித்து அமைச்சர் கடும் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மம்தா தலையை துண்டிக்க வேண்டும்: பாஜக தலைவர் சஞ்சய் தாஸ் மம்தாவை ‘சூனியக்காரி’ என்று அழைப்பதையும், அவரை ‘தலை துண்டிக்க வேண்டும்’ என்று கோருவதையும் காட்டும் ஒரு காணொலியை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டு, கண்டனம் தெரிவித்துள்ளது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *