திருப்பரங்குன்றம் பிற மத வழிபாட்டுத்தலம் அருகில் உள்ள எல்லைக்கல்லை தீபத்தூண் என்று கூறி அதில் ஒன்றிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்போடு சென்று விளக்கேற்றுங்கள் என்று கூறியவர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.
நேற்று (25.1.2026) சென்னை – சேத்துப்பட்டு சின்மயா கலாச்சார அரங்கத்தில் 2025 ஆம் ஆண்டில் சிறந்த ஆன்மீகவாதி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, அங்கு வைக்கப்பட்ட திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள எல்லைக் கல் போன்ற ஒன்றை தெர்மகோலில் செய்து, அதன் மீது அகல் விளக்கு ஒன்றை வைத்து நீதிபதி
ஜி.ஆர்.சுவாமிநாதன் ஏற்றினார்.
வேல் யாத்திரையின் போது பிவிசி பைப்பில் வேல் செய்து ஊர்வலமாகச் சென்றார்கள்.
தீபம் ஏற்றுகிறேன் என்ற பெயரில் தெர்மாகோலில் தீபம் ஏற்றுகிறார்கள். நீதிபதியின் அருகில் ‘சோடா பாட்டில் புகழ்’ மன்னை ஜீயரும் இருக்கிறார்.
கட்சிக்காரர்கள் செய்யலாம்; அது அரசியல். ஆனால், ஒரு நீதிபதி இதைச் செய்யலாமா?
