

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 52ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பள்ளியின் செயலர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமையேற்க, சிறப்பு விருந்தினராக இதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவியும், பொறியாளரும் விஞ்ஞானியுமான ஜெயபாரதி சேதுராமன், (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்திய அரசு பணி) பங்கேற்றார். உடன்: பரிசுப் பெற்ற மாணவர்கள். பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 46-ஆவது ஆண்டு விழா வளாகத்தில் உள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்குத் தலைமை வகித்த பள்ளித் தாளாளர் வீ.அன்புராஜ் கல்வி மற்றும் வருகைப் பதிவில் சிறந்து விளங்கியவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கிப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
