மதுரை எய்ம்ஸ் என்னவாயிற்று? பிரதமரிடம் கேளுங்கள் எடப்பாடி பழனிசாமிக்குக் கோரிக்கை வைத்த துணை முதலமைச்சர் கேள்வி!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.25 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்னவானது என்று பிரதமர் மோடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டால் விடிவு காலம் பிறக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 8 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவதாக விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலின், இனி பிரதமர் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருவார் என்றும் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூர் பகுதியில் உலகத் தரத்திலான மருத்துவ வசதிகளுடன் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 782 சதுர அடி பரப்பளவில், ரூ.2,021 கோடி மதிப்பீட்டில் இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது.

மதுரை எய்ம்ஸ் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 13.05 லட்சம் சதுர அடி பரப்பளவில் மருத்துவக் கல்லூரி கட்டடம், நர்சிங் கல்வி வளாகம், நிர்வாக மற்றும் ஆடிட்டோரியம் கட்டடங்கள், பிரதான மருத்துவமனை, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட மொத்தம் 13 கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகளை மருத்துவமனை நிர்வாகம் விரைவுபடுத்தி வருகிறது.

இரண்டாம் கட்டத்தில் 10.26 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஆடிட்டோரியம், குடியிருப்பு வளாகங்கள், இயக்குநர் பங்களா,  அங்காடி வளாகங்கள் (ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்), ஆயுஷ் மருத்துவப் பிரிவு உள்ளிட்ட 16 கட்டடங்கள் கட்டப் படவுள்ளதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மொத்தமாக 29 கட்டடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதற்கான 3டி மாடல் ஏற்ெகனவே வெளியிடப்பட்டது.

இந்த மாதிரி காணொலி (மாடல் வீடியோ) வெளியிட்ட போதே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட வளாகம் ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கல் விழா முடிவடைந்தும், இன்னும் திறக்கப்படவில்லை. இன்னும் வண்ணப்பூச்சு (பெயிண்டிங்) பணிகள் நடந்து வருகிறது. இதன்பின் மருத்துவமனைக்கு தேவையான இயந்திரங்கள் வாங்கப்பட்டு எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் என்டிஏ பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். அவரை ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த நிலையில் சட்டமன்றத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்.

அதில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பிரதமர் மோடி சென்னை வந்திருக்கிறார். அவர் இனிமேல் அடிக்கடி தமிழ்நாடு வருவார். அப்போது அவரிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கூறினால், அதற்கு ஒரு விடிவு காலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *