மணிப்பூரில் தொடர்கிறது இனப்படுகொலை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இம்பால், ஜன. 24- கடந்த 2023இல் மணிப்பூரில் மெய்தி இனத்தவருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க உயர்நீதிமன்றம் பரிந்துரைத்ததை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதில் இரு இனத்தவருக்கும் மோதல் ஏற்பட்ட வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 258 பேர் வரை கொல்லப்பட்டனர். 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்ந்த வருகின்றனர்.

2023 மே மாதம் அங்கு பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்லவம் அழைத்துச் செல்லப்பட்ட காட்சிப் பதிவு வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பல பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். அதில் ஒருவர் அண்மையில் உடல் நலம் மோசமடைந்து உயிரிழந்தார்.

அவரை வன்கொடுமை செய்த வழக்கை விசாரித்து வரும் சிபிஅய், 2 ஆண்டுகள் கடந்தும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

மறுபுறம் இரு இனத்தவர் இடையேயும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் அவ்வபோது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மணிப்பூரில் குக்கி சமூகப் பெண்ணைத் திருமணம் செய்த மெய்தி இன நபர் கடத்திக் கொலை செய்யப்ட்டுள்ளார்.

கொல்லப்பட்ட 38 வயதான மெய்தி இன இளைஞர் ரிஷிகாந்தா, மெய்தி மூகத்தினர் அதிகம் வாழும் கக்சிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

ரிஷிகாந்தா, குக்கி சமூகத்தைச் சேர்ந்த சிங்னு ஹாவோகிப் என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு, குக்கி சமூகத்தினர் அதிகம் வாழும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இனக்கலவரத்தின் முன் நேபாள் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற அவர் இந்த வாரம் ஊர் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 21.1.2026 அன்று மாலை, ‘யுனைடெட் குக்கி நேஷனல் ஆர்மி’ என்ற அமைப்பைச் சேர்ந்த ஆயுதமேந்திய கும்பல், துய்புவாங் என்ற இடத்திலிருந்து ரிஷிகாந்தாவை கடத்திச் சென்றுள்ளது.

கடத்தப்பட்ட ரிஷிகாந்தாவை நட்ஜங் என்ற இடத்திற்குக் கொண்டு சென்று அந்தக் கும்பல் சுட்டுக்கொலை செய்துள்ளது. இதை அந்த கும்பல் காட்சிப் பதிவு செய்துள்ளது. அந்த காட்சிப் பதிவில் ரிஷிகாந்த்தா, தன்னை கொல்ல வேண்டாம் என கெஞ்சுவது பதிவாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிந்த காவல் துறையினர் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *