குறைபாடுள்ள எஸ்.அய்.ஆர். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது! பா.ஜ.க.மீது நேதாஜி பேரன் குற்றச்சாட்டு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன.24 தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங் களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடந்து வருகிறது.

இந்நிலையில் எஸ்.அய்.ஆர். ஒரு குறைபாடுள்ள ஒரு செயல்முறை என்றும், இது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் அவதியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் தனது பெயரைத் தக்க வைத்துக் கொள்வ தற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முன் ஆஜரான பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார். அவருக்கு முன்னதாக விசாரணை தாக்கீது அனுப்பப்பட்டிருந்தது.

விசாரணைக்கு பின் அவர் கூறுகையில், இந்தத் திருத்தப் பணி மிகவும் அவசரமாகவும், முறை யான திட்டமிடல் இல்லாமலும் செயல் படுத்தப்படுகிறது. ஊழியர்களுக்குச் சரியான பயிற்சி அளிக்கப்படாததால், இது ஒரு குழப்பமான நிலையை உருவாக்கியுள்ளது. என்னை விசாரணைக்கு அழைத்ததில் எனக்குப் பெரிய சிக்கல் இல்லை. ஆனால், வயதான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று உடல்நலம் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், பாஜகவின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இது மேற்கு வங்க மக்களுக்குக் கடும் இன்னல் களைத் தருவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச் சாட்டைத் தானும் ஆதரிப்பதாகவும் சந்திரகுமார் போஸ் தெரிவித்துள்ளார்.

சந்திர குமார் போஸ் மட்டு மல்லாது, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், நடிகர் தேவ், கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தொழிலதிபர் ஸ்வபன் சாதன் பாசு மற்றும் எழுத்தாளர் ஜாய் கோஸ்வாமி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களுக்கும் தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. சிறிது காலம் பாஜகவோடு பயணித்த சந்திர குமார் போஸ், கடந்த 2023 இல் அக்கட்சியை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *