டாவோஸ், ஜன.21 இந்தியாவில் முதலீடு செய்வதற்கு நம்பிக்கைக்கு உரிய மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வ தாக டபிள்யு.இ.எப்., எனப்படும் உலகப் பொருளாதார மன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் குளோபல் வேல்யூ செயின்ஸ் அவுட்லுக் 2026 அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உலக விநியோக தொடர், கட்ட மைப்பு ரீதியாக ஏற்ற, இறக்கம் மிகுந்த காலத்துக்குள் நுழைந்துள்ளது. இதனால், நிறுவனங்களும், அரசு களும் எங்கு முதலீடு செய்வது, எங்கு உற்பத்தி செய்வது என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. தற்போது நான்கில், மூன்று பங்கு முதலீட்டாளர்கள், வளர்ச்சிக்கு நிலைத்தன்மையை முன்னு ரிமையாக கருதுகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவின் தமிழ்நாட்டில் நிலையான மற்றும் கணிக்கக்கூடிய முதலீட்டு சூழல் நிலவுகிறது. இதற்கு, அரசியல் நிலைத்தன்மை, தொடர்ச்சியான ஒழுங்காற்று நடவடிக்கைகள், ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற வகையிலான ஊக்குவிப்பு நட வடிக்கைகள், வலுவான உள்கட்ட மைப்பு, திறமை வாய்ந்த மனித வளம் ஆகியவை காரணங்களாக உள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ்நாட்டின் முன்கூட்டியே கணிக்கக்கூடிய பொருளாதார கொள்கைகள், நீண்டகால உலக முதலீடுகளை ஈர்த்து வருகின்றன.
அங்கு தொழில் நடவடிக்கை களை மேற்கொள்வது எளிமையாக இருப்பதாகவும், அரசின் ஒப்புதல்கள் விரைவாக கிடைப்பதாகவும் ஜப்பா னிய நிறுவனங்கள் கூறுகின்றன.
தயார் நிலை
வியட்நாமின் மின்சார வாகன உற்பத்தியாளரான வின்பாஸ்ட், ஆண்டுக்கு 50,000 வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்ட ஆலையை, தமிழ்நாட்டில் 400 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ளது. 24 முதல் 36 மாதங்கள் வரை ஆகியிருக்க வேண்டிய இந்த ஆலை யின் கட்டமைப்பு, வெறும் 17 மாதங்களில் நிறைவடைந்துள்ளது.
இதற்கு தமிழ்நாடு அரசின் கொள்கைகளும், தயார் நிலையில் இருக்கும் பணியாளர்களும் தான் காரணம். இந்த நிலையான, முதலீட்டுக்கு உகந்த சூழல், உலக விநியோக தொடரில், நம்பகமான தொழில் களமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தி உள்ளது.
இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
