செவிலிய உதவியாளர் பணி: 999 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 21- செவிலிய உதவியாளர் பயிற்சி பெற்றவர் களுக்கு தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறையில் பணி செய்ய வாய்ப்பு அமைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 999 காலிப்பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 19 முதல் தொடங்கி இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விரும்பமுள்ளவர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்க்ள் பொதுப்பிரிவு – 308, பிசி – 264, பிசி(எம்) – 35, எம்பிசி – 200, எஸ்சி – 152, எஸ்சி(ஏ) – 30, எஸ்டி – 10 என நிரப்பப்படுகிறது.     இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 40 காலிப்பணியிடங்கள் மற்றும் தமிழ் வழி கல்விக்கு 203 காலிப் பணியிடங்கள் உள்ளன.

வயது மற்றும் கல்வித்தகுதி     01.07.2026 தேதியின்படி, விண்ணப்ப தார்கள் குறைந்தபட்சம் 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். ஒசி பிரிவினருக்கு அதிகபடியாக 34 வயது வரையும், அதில் மாற்றுத் திறனாளிகளுக்கு 44 வயது வரையும் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர பிரிவினருக்கு மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பதார்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றி இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் கட்டாயமாகும். மேலும், அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலிய உதவியாளர் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஊதிய விவரம் செவிலிய உதவியாளர் கிரேடு II பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிலை 1 கீழ் ரூ.15,700 முதல் 58,100 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்களுக்கு தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை கிடையாது. விண்ணப்பதார்களின் மதிப்பெண்கள், தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப் படுவார்கள். மருத்துவம் மற்றும் குடும்பநல வாரியத்தின் துறையின் அரசாணைகளுக்கு உட்பட்டு தெரிவு முறை இருக்கும். வகுப்பு வாரியாக உள்ள இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். விண்ணப் பதார்களின் 10ஆம் வகுப்பு மதிப் பெண்களில் இருந்து 40 சதவீதம் மற்றும் செவிலிய உதவியாளர் பயிற்சி சான்றிதழில் இருந்து 60 சதவீதம் என்ற விதம் 100 சதவீதத்திற்கு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

உரிய பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பிற்கு https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படுகிறது. எஸ்சி/ எஸ்சிஏ/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்கள் ரூ.300 செலுத்த வேண்டும். இணைய வழியில் விண்ணப்பிக்கும்போது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வைத்துகொள்ளவும்.

விண்ணப்பம் தொடக்கம் 19.01.2026. விண்ணப்பிக்க கடைசி நாள் 08.02.2026. தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் தமிழ் நாடு அரசின் மருத்துவத்துறை வேலைவாய்ப்பிற்கான விவரங்கள் மற்றும் அடுத்தக்கட்ட விவரங்கள் இணையதளத்தில் வழியாகவே வெளியிடப்படும். விண்ணப்பதார்கள் தொடர்ந்து இணையதளத்தை பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 022-42706528 அல்லது [email protected] என்ற இமெயில் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம். இப்பதவிக்கான தகுதி குறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-24355757 என்ற எண்ணிற்கு திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக நேரத்தில் தொடர்புகொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *