வணிக வரி நிலுவை ரூ.27,527 கோடி அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

2 Min Read

சென்னை, ஏப். 22- வணிக வரித் துறையில் மொத்தம் ரூ.27,526.82 கோடி வரி நிலுவை உள்ளது என்றும் நிதியமைச்சர், முதலமைச்சர், ஆளுநர் ஒப்புதலுக்கு பிறகு,  வணிகர்களுக்கு வாய்ப்பு தரும் சமாதான திட்டம் செயல் படுத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். 

வணிக வரித் துறையில் நிலுவையிலுள்ள வரியை வசூலிக்க,சமாதான திட்டம் கொண்டுவருவது குறித்து வணிக வரித்  துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:- 

வணிக வரித் துறையில் நிலுவை வரிகளை செலுத்தி, தீர்வு காண வணிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஒரு முறை திட்டமான சமாதான திட்டம் முதலில் கடந்த 1999 இல்  கொண்டு வரப்பட்டது. பின்னர், 2002,  2006, 2008, 2010, 2011 ஆம் ஆண்டுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப் பட்டது.

தற்போது வரி நிலுவையாக, தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி இனங்களில் ரூ.16,732.39 கோடி,  மத்திய விற்பனை வரி இனங்களில் ரூ.6,532.75 கோடி, தமிழ்நாடு பொது விற்பனை வரி இனங்களில் ரூ.4,107.85 கோடி என பல சட்டங்களின்கீழ் மொத்தம் ரூ.27,526.82 கோடி வரி நிலுவை உள்ளது. கடந்த 2021 ஆகஸ்டில் பேரவை யில் அறிவிக்கப்பட்டபடி, சமாதான திட்டம் தொடர்பாக கோப்பு தயாரித்து,  ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது. ஆளுநர் கடந்த 2022 மே 10ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். அன்று,  பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்பதால் சட்ட மசோதா அறிமு கம் செய்ய இயல வில்லை. எனவே,  அவசரச்சட்டமாக இயற்ற உத்தேசித்து,  சட்டத் துறையை தொடர்ந்து, நிதித் துறைக்கு கோப்புகள் அனுப்பப் பட்டன. நிதி அமைச்சர் கேட்டுள்ள விளக்கங் கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில்,  சமாதான திட்டம் செயல்படுத்துவதற் கான சட்ட மசோதா குறித்த கோப்பு தற்போது அவரது ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. நிதி அமைச்சர் ஒப்புதலுக்கு பிறகு, முதலமைச்சர், ஆளுநருக்கு அனுப்பி, அவர்களது ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, சமாதான திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அவதூறு பரப்புவதா?

ரூ.100 கோடி இழப்பு கேட்டு 

டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு தாக்கீது

சென்னை, ஏப். 22- தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை சமீபத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகி களின் சொத்துப் பட்டியல் குறித்து ஒரு காட்சிப் பதிவை வெளியிட்டார். 

இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலைக்கு தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தாக்கீது விடுத்து உள்ளார். அவதூறு பரப்பும் வகையில் ஒரு காட்சிப் பதிவை வெளியிட்டதற்காக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். 48 மணி நேரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்மீது வழக்கு தொடரப் படும். மேலும், இழப்பீடு தொகையாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, அண்ணா மலைக்கு தி.மு.க. சார்பில் ஆர். எஸ்.பாரதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தாக்கீது விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *