பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் துன்புறுத்தப்படும் புலம் பெயர் தொழிலாளர்கள் மம்தா குற்றச்சாட்டு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கொல்கத்தா, ஜன.17 பாஜக ஆளும் மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் பெங்காலி பேசுவ தற்காக சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு பெங்காலில் நிர்வாக நிகழ்ச் சிகளில் பங்கேற்பதற்காக அம்மாநில முதலமைச்சர் மம்தா சென்றிருந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2026 மேங்கு வங்க மாநில சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை பாஜக உணர்ந்துள்ளது. இதனால் மாநிலத்தில் கலவரத்தைத் தூண்ட திட்டமிடுகிறது.

மேற்கு வங்க மாநிலத்திற்கு வெளியில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக் கப்படுவதற்கு எதிராக முர்ஷிதாபாத்தில் உள்ள டெல்டங்கா இடத்தில் போராட் டம் நடத்தப்பட்டது. மைனாரிட்டி சமூகத்தின் இந்த கோபம் நியாமானது.

மேற்கு வங்கத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் துன்புறுத்தப்படு கிறார்கள். நாங்கள் அவர்களுடைய குடும்பத்துடன் நிற்கிறோம்.

இவ்வாறு மம்தா தெரிவித்தார்.

வெளிமாநிலத்தில் பெங்கால் மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக முர்ஷிதாபாத் மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதனால் முக்கிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது.

பணம் மூட்டை சிக்கிய விவகாரம்

நாடாளுமன்ற குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி மனு தள்ளுபடி

உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜன. 17-  வீட்டில் பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில் நாடாளுமன்ற குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஸ்வந்த் வர்மாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது வீட்டில் கட்டு கட்டாக பணக் குவியல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிபதி யஷ்வந்த் மறுத்தார். இச்சம்பவம் தொடர்பாக யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக்கோரி 146 எம்.பிக்கள் கையெழுத்திட்டு நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம் வழங்கினர். இதையடுத்து 3 உறுப்பினர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.  இதே தீர்மானம் மாநிலங்களவையில் நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையே தன்னை நீக்குவதற்கான தீர்மானத்தை மக்களவைத் தலைவர் ஏற்றுக் கொண்டதையும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நாடாளுமன்றக் குழுவின் சட்டப்பூர்வமான தன்மையையும் எதிர்த்து யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் கடந்த 8ஆம் தேதி ஒத்திவைத்தது. நீதிபதிகள் தீபங்கர் தத்தா, எஸ்.சி. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதில் யஷ்வந்த் வர்மாவின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *