புதுடில்லி, ஜன.17 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நேற்று (16.1.2026) அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக குஜராத், அரியானா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிதமான நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மய்யம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த மூன்று இடங்களிலும் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கட்டிடங்களுக்குச் சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும், அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நில அதிர்வுகள் பொதுமக்களிடையே ஒருவித பதற்றத்தை உருவாக்கியுள்ளன. தேசிய நில அதிர்வு மையம் தொடர்ந்து இந்த நில அதிர்வுகளைக் கண்காணித்து வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்ளூர் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
