டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் இரு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு இருவேறு மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நிரந்தர கரோனா போல தாக்கும் ஒன்றிய பாஜக அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்: ஆட்சிப் பொறுப்பேற்றபோது கரோனா இரண்டாவது பேரலையின் கடுமையான தாக்கம், அதனைத் தொடர்ந்து நிரந்தரக் கரோனா போல தாக்கிக் கொண்டே இருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
தி இந்து:
* வாக்காளர் நீக்கம், குடியுரிமை குறித்து தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி: வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது ஒரு நபரின் இந்தியாவில் வசிக்கும் உரிமையை சந்தேகத்திற்குள்ளாக்குமா என்று நீதிமன்றம் கேள்வி!
தி டெலிகிராப்:
* இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு 2025இல் 13% அதிகரித்துள்ளது என அமெரிக்க ஆய்வுக் குழு கூறுகிறது: இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு 2025-ஆம் ஆண்டில் 13% அதிகரித்துள்ளது என்றும், பெரும்பாலான சம்பவங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியால் ஆளப்படும் மாநிலங்களிலேயே நிகழ்ந்துள்ளன என்றும் வாசிங்டனை சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நீட்-பிஜி தகுதி மதிப்பெண் இப்போது 800-க்கு -40 ஆக குறைப்பு: முதுகலை மருத்துவ இடங்கள் 9000 காலியாக உள்ளதை நிரப்ப இந்த திட்டம்: திருத்தப்பட்ட அளவுகோல்களின் கீழ், பொது மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) தகுதி சதவிகிதம் 50ஆவது சதவிகிதத்திலிருந்து 7ஆவது சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு (PWBD) இது 45ஆவது சதவிகிதத்தில் இருந்து 5ஆவது சதவிகிதமாகவும், பட்டியல் ஜாதி, பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (SC, ST மற்றும் OBC) சதவிகிதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, தகுதி மதிப்பெண் 800-க்கு -40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (எதிர்மறை மதிப்பெண் காரணமாக).
* மனுஸ்மிருதியை குறிப்பிட்டு, கைம்பெண் ஆன மருமகளுக்கு நீதிபதிகள் பங்கஜ் மிதல் மற்றும் எஸ் வி என் பட்டி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு: எந்தத் தாயும், தந்தையும், மனைவியும், மகனும் கைவிடப்படுவதற்கு தகுதியற்றவர்கள் என்றும், அவர்களைக் கைவிடுபவருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் கூறும் மனுஸ்மிருதியை குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றம், மாமனாரின் மரணத்திற்குப் பிறகு கைம்பெண் ஆன மருமகள், 1956-ஆம் ஆண்டு இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் அவரது சொத்திலிருந்து பராமரிப்புக் கோர உரிமை உண்டு என்று தீர்ப்பு அளித்தது.
* அனைத்துப் பள்ளிகளிலும் ஏழைகளுக்கு 25% இலவச இடங்களை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை: ஒரு ரிக்ஷா ஓட்டுநரின் குழந்தை ஒரு பெரும் பணக்காரரின் அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியின் குழந்தையுடன் பள்ளியில் படிக்கும் போது மட்டுமே சகோதரத்துவம் என்ற அரசியலமைப்புச் சட்ட இலக்கை அடைய முடியும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளபடி, அனைத்துப் பள்ளிகளும் ஏழை மற்றும் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்காக 25% இலவச இடங்களை வழங்குவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.
– குடந்தை கருணா
