சென்னை, ஜன.14 தி.மு.க. தலைவரும் முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
’’ஜாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்!
தி.மு. கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளை யாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்திப் பரிசுகள் வழங்கிடுங்கள்.
சென்னை சங்கமம் 2026 கலைவிழாவைச் சென்னையில் தொடங்கி வைக்கிறேன். 17 ஆம் நாள் மதுரை அலங்காநல்லூர் சென்று கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்க வுள்ளேன்.
2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்க லாகப் பொங்கட்டும்!’’ என்று கூறியுள்ளார்.
