திருச்சி. ஜன 12 திருச்சி திருவரங்கத்தைச் சேர்ந்த திராவிடர் கழகத்தின் மூத்த முன்னோடி, பெரியார் பெருந் தொண்டர் டாக்டர் எஸ். எஸ். முத்து அவர்களின் மகன் வழக்குரைஞர் சித்தார்த்தன் (54) நேற்று முன்தினம் (ஜன.10) மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
தகவல் அறிந்து மதுரையில் பிரச்சார பயணத்தில் ஈடு பட்டிருந்த திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மறைந்த வழக்குரைஞர் சித்தார்த்தன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் மீளாத் துயரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மறைந்த வழக்குரைஞர் சித்தார்த்தன் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூர் ஆய்வுக்குப் பின்பு மாலை 7.30 மணிக்கு திருச்சி திருவரங்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தகவலறிந்த திராவிடர் கழகத் தோழர்கள், நிருவாகிகள் மற்றும் தோழர்கள் மறைந்த சித்தார்த்தன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இரங்கல் கூட்டம்
நேற்று (ஜன.11) காலை 10.30 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார், கழக மாநில பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி, தஞ்சை மாவட்ட கழக தலைவரும் வழக்குரைஞருமான அமர்சிங், சீனி விடுதலை அரசு, கழக மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மு.சேகர், மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் அம்பிகா கணேசன், வழக்குரைஞர்கள் கங்கைசெல்வன், பூவை.புலிகேசி, திருச்சி வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், வழக்குரைஞர்கள் கென்னடி, மாரிமுத்து, கணேசன், மதுரை செல்வம், துரைஅருண், விடுதலை – வாசகர் வட்ட செயலாளர் வழக்குரைஞர் அரிகரன், மனோகர் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் அறிவுச்சுடர், கழக மாவட்டச் செயலாளர் மகாமணி, திருவரங்கம் நகர தலைவர் கண்ணன், செயலாளர் முருகன், துணைச் செயலாளர் அண்ணாதுரை, திருவரங்கம் மோகன், மாவட்ட காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் நற்குணம், பெல்.ஆறுமுகம் பொதுக்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சங்கிலிமுத்து, கல்பாக்கம் ராமச்சந்திரன், பெல் தி.தொ.க அசோகன், பேபி, மாவட்ட மகளிர் அணி சாந்தி, விஜயராகவன், விடுதலை செல்வம், ஜெயராஜ், கவுதமன். விடுதலை மா.செந்தமிழினியன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், நீதிபதி, வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவரது இல்லத்தில் இருந்து அவரது உடலை ஊர்வலமாக எடுத்து கொண்டு செல்லப்பட்டு திருவரங்கம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.
