புதுடில்லி, ஜன.12 அய்.ஏ.எஸ்,அய்.பி.எஸ் உள்ளிட்ட உயரிய பதவிகளுக்காக ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் தேர்வுகளில், ஆள்மாறாட்டம் மற்றும் முறை கேடுகளைத் தடுக்கப் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனிவரும் தேர்வுகளில் தேர்வர்களுக்கு முக அடையாள சோதனை கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
ஏ.அய். தொழில்நுட்பம்: செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறும்.
டிஜிட்டல் சரிபார்ப்பு: தேர்வர் விண்ணப்பப் படிவத்தில் சமர்ப்பித்த ஒளிப்படமும், தேர்வு மய்யத்திற்கு வரும் நபரின் முகமும் ஒத்துப்போகிறதா என்பது சில வினாடிகளில் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்படும்.
சோதனை முயற்சி வெற்றி: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சில மய்யங்களில் இத்திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. தேசிய மின் ஆளுமை (NeGD) உதவியுடன் நடத்தப்பட்ட இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.
யு.பி.எஸ்.சி தலைவர் விளக்கம்: இது குறித்துத் தேர்வாணையத்தின் தலைவர் அஜய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்வர்களை அடை யாளம் காண்பதை எளிதாக்கவும், தேர்வுகள் மிகவும் வெளிப்படை யாகவும், பாதுகாப்பாகவும் நடப் பதை உறுதி செய்யவும் இந்த முக அடையாள சோதனை முறை கட்டாய மாக்கப்படுகிறது” என்று குறிப்பிட் டுள்ளார். இந்த அதிரடி மாற்றத்தின் மூலம், தேர்வு மய்யங்களில் ஆள்மாறாட்டங்கள் நடப்பது முற்றிலும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
