இடுக்கி, ஜன.10 கேரள மாநிலத் திலுள்ள சில நீதிமன்றங்களுக்கு ‘மனித வெடிகுண்டு’ மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.
இடுக்கி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 8.1.2026 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் வெடிப்பு நிகழும் என்று மின்னஞ்சல்வழி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தமிழ் விடுதலை இயக்கத்தின் டி.எல்.ஓ. பெயரில் அந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
முகம்மது அஸ்லாம் விக்ரம் என்ற பெயரைத் தாங்கியிருந்த அந்த மின்னஞ்சல் தொடர்பில் காவல்துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. முட்டம் காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக அந்த நீதிமன்ற வளாகத்திற்குச் சென்று, பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதனிடையே, காசர்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கும் இதுபோன்ற மின்னஞ்சல்வழி மிரட்டல்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காசர்கோடு நீதிமன்றக் கட்டடத்தின் முக்கிய இடங்களில் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துடன் கூடிய நவீன வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் நண்பகல் உணவு நேரத்தின்போது அவை வெடிக்கும் என்றும் மிரட்டல் வந்தது. காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் வெடிபொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்ற வளாகத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எதிலும் அரசியல் பார்வை இல்லாத முதலமைச்சர்!
‘ஜனநாயகன்’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்காததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஜன.10 த.வெ.க. தலைவர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ நேற்று (ஜனவரி 9) வெளியாக இருந்தது. ஆனால் மத்திய தணிக்கை வாரியம் சென்சார் சர்டிபிகேட் வழங்காததால் ஜனநாயகன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம் சென்ற நிலையில், வழக்கை விசாரித்த தனி நீதிபதி தணிக்கை வாரியம் சென்சார் சர்டிபிகேட் வழங்க 9.1.2026 அன்று காலை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள் சென்சார் சர்டிபிகேட் வழங்க உத்தர விட்டிருந்த தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் வழக்கை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனால் ஜனநாயகன் திரைப்படம் வரும் 21ஆம் தேதி அன்று கூட ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்காததற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ”#CBI, #ED, #IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்” என்று கூறியுள்ளார்.
தலைசிறந்த
மனிதநேயம்!
கீழ்ப்பாக்கம் அரசு மருத் துவமனையில் மூளைச் சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்பு கொடையினால் ஆறு பேர் மறுவாழ்வு பெற்றனர்.
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: திருப்பதி ஏழு மலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக சென்று 7.75 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
சிந்தனை: சொர்க்க வாசலில் நுழைந்தவர்கள் வீடு பேறு (சொர்க்கம்) அடைந்தார்களா? அல்லது சொந்த வீட்டிற்குத் திரும்பினார்களா?
