புராண அலசல்! சிவன் செத்து விட்டானா? மின்சாரம்

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

“புட்டுக்கு மண் சுமந்தான் சிவன்” என்ற புராணக் கதை அளப்பு – நம் நாட்டில் பிரசித்தி பெற்றது!

தல வரலாறு

சிவபெருமான் மதுரை மாநகரில் 64 திருவிளையாடல்கள் நடத்தியதாக கற்பிக்கப்பட்டது. அந்த அளப்பு இதோ:

அதில் ஒன்றான ‘பிட்டுக்கு மண் சுமந்த படலம்’ வைகை ஆற்றங்கரையில் உள்ள இத்தலத்தில் தான் நடைபெற்றது. ஒரு சமயம் வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மதுரை நகரமே அழியும் நிலை வந்தது. அப்போது மதுரையை ஆண்டு வந்த அரிமர்த்தன பாண்டிய மன்னன், “வீட்டுக்கு ஒருவர் மண் சுமந்து வைகைக் கரையை வலுப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டானா.

இச்செய்தி மக்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட் டது. மதுரை நகரின் கிழக்கு திசையில் வந்தி என்னும் மூதாட்டி வசித்து வந்தாள். அவளுக்கு குழந்தைகள் இல்லை. முதுமையிலும் புட்டு விற்று பிழைப்பு நடத்தி வந்தாள். மூதாட்டி, தான் செய்யும் முதல் புட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்தியம் செய்துவிட்டு, அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். பின்னர்தான் அவிக்கும் புட்டை விற்க ஆரம்பிப்பாள்.

வைகைக் கரையை வலுப்படுத்த ஒவ்வொரு வருக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. அதன் படி,வந்திக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி வழங்கப்பட்டது. குழந்தைகள் இல்லாததால், “இந்தப் பணிக்கு யாரை அனுப்புவது? வயதான காலத்தில் தன்னாலும் கரையை அடைக்க முடியாது” என்று மிகவும் வருத்தம் அடைந்தாள்.

இதை அறிந்த சுந்தரேஸ்வரப் பெருமான் (சிவன்) மூதாட்டிக்கு உதவ முடிவு செய்தான். அதன்படி, உருவத்தை மாற்றி வந்தியின் முன் வந்து நின்ற சிவன், “பாட்டி! கூலிக்கு நீ ஆள் தேடி அலைவதாக நான் கேள்விப்பட்டேன். நானே உனக்குப் பதிலாக வேலை செய்கிறேன். கூலியாக நீ அவிக்கும் புட்டை மட்டும் கொடுத்தால் போதும்” என்று கூறினான். வந்தியும் அதற்கு ஒத்துக்கொண்டாள்.

சிவன், தான் கொண்டு வந்த மண்வெட்டி, கூடையுடன் கரைக்குச் சென்று, வந்திக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்தான். அங்கு சிறிது நேரம் சுறுசுறுப்பாக மண் வெட்டினான். அதன் பிறகு, சரியாக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவறவிட்டது போலவும் நடித்தான். சிறிதுநேரத்தில் வந்தியின் வீட்டுக்குச் சென்று, “பாட்டி புட்டு கொடு, கூலியில் கழித்துக்கொள்” என வாங்கி சாப்பிடுவான்.

பின்பு அங்கிருந்த நீரில் குதித்து விளை யாடினான். இவர் செய்வதைப் பார்த்து உடன் வேலை செய்தவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் வந்தி மூதாட்டியின் இடத்தில் மட்டும் ஒழுங்காக வேலை நடக்கவில்லை. அப்போது, தலைமைக் காவலர் அங்கு வந்தார். அவர், “வேலை செய்யாமல் என்ன ஆடிக் கொண்டிருக்கிறாய். மூதாட்டியிடம் புட்டை வாங்கித் தின்றுவிட்டு வேலை செய்யாமல் ஏமாற்றுகிறாயா?” என்று கண்டித்தார்.

அச்சமயம் பணிகளைப் பார்வையிட அரிமர்த்தன பாண்டியன் அங்கு வந்தான். அப்போது ஓர் இடத்தில் மட்டும் வேலை நடைபெறாமல் இருப்பதைப் பார்த்து கோபம் அடைந்தான். மன்னன் விசாரிக்க, கூலியாளராக வந்த சிவன்தான் அந்த இடத்திற்கு பொறுப்பு என் பதை அறிந்தான். இதையடுத்து, காவலரிடம் இருந்த பிரம்பைப் பிடுங்கி, அவனின் முதுகில் ஒங்கி அடித்தார். ஆனால் அடிப்பட்டவனுக்கு பதிலாக மன்னன் அலறினான். மன்னன் மட்டுமல்ல, அங்கு நின்றவர்கள் எல்லோரும் அலறினர்.

பின்பு சிவன், ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டினான். உடனே, கரைபுரண்டு ஓடிய வெள்ளம் வற்றி விட்டது. தான் அடித்த பிரம்பு அடி, தன் மீது மட்டுமின்றி, தன்னைச் சுற்றி நின்றவர்கள் மீதும் விழுந் தது கண்டு அதிசயித்தான் அரிமர்த்தன பாண்டியன். அந்த வேளையில் கூலியாளாய் வந்த சிவன் மறைந்துவிட்டான். அப்போது தான் கூலியாளாய் வந்தது சிவன் என்பதை மன்னனும், மக்களும் உணர்ந்தனர். பின்பு வானில் தோன்றிய (?) சிவன் வந்தி மூதாட்டிக்கு அருள்புரிந்து, அவளை வானுலகம் அழைத்துச் சென்றான்!

கோவில் அமைப்பு

ஆலயத்தின் கருவறையில் மூலவர் புட்டு சொக்கநாதர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறான். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலைப் போன்றே இத்தலத்தில் உள்ள புட்டு சொக்கநாதனின் வலதுபக்கம் மீனாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. எனவே இது திருமணக்கோல சன்னிதி ஆகும். சிவபெருமான் வந்தியம்மைக்கு இந்த இடத்தில் தான் மோட்சம் கொடுத்தான். அதன் அடிப்படையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. எனவே, இங்கு மட்டுமே வந்தியம்மைக்கு தனிச் சன்னிதி உள்ளது.

இப்படியொரு ‘புராண அளப்பு’ நம் நாட்டில் உண்டு. ஒரு மூதாட்டிக்காக இ(ற)ரங்கி வந்து சிவபெருமான் – அரசன் ஆணைப்படி – மூதாட்டியின் புட்டுக்காக மண் சுமந்தானாம் சிவபெருமான்! (அதில் கூட தில்லுமுல்லு – சோம்பல்தனம்).

கடைசியாக ஒரு த்ரில் காட்சி! என்ன செய்தானாம் சிவபெருமான்? ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டினான்! என்ன ஆச்சரியம்! வைகையில் கரை புரண்டு ஓடிய வெள்ளம்… (டிஷ்யூம்! டிஷ்யூம்!!) நின்றது – வைகையே வற்றி விட்டதாம்!

சரி… அவர்கள் வழிக்கே வருவோம்! கடந்த 10 ஆண்டுகளை எடுத்துக் கொள்வோம்!

எத்தனை எத்தனைப் புயல்கள்! வெள்ளக் காடுகள் நம் தமிழ்நாட்டில்!

  1. வர்தா – 2016 டிசம்பர்
  2. ஒக்கி – 2017 நவம்பர்
  3. கஜா – 2018 நவம்பர்
  4. நிவார் – 2020 நவம்பர்
  5. பூரேவி – 2020 டிசம்பர்
  6. பெங்கல் – 2024 நவம்பர்
  7. மோந்தா – 2025 அக்டோபர்

2025 – புட்வா புயலும், வெள்ளமும்.

இவ்வளவு இயற்கைப் பேரழிவுகள் நடந்துள்ளன. மக்களும் மாண்டுள்ளனர், பயிர்கள் நாசமாகின!

ஒரே ஒரு கூடை மண்ணை வைகைக் கரையில் வெட்டிப் போட்டவுடன் – கரை புரண்டு ஓடிய வெள்ளத்தை வற்றச் செய்த சிவன் – கடந்த 10 ஆண்டுகளில் இயற்கைச் சீற்றத்தால் பாழ்ப்பட்ட தமிழ்நாட்டைக் காக்க வராதது ஏன்?

ஓ, தந்தை பெரியார் வந்தவுடன் அந்த சிவன் செத்து விட்டானோ?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *