மலர்மாலை வைத்து மரியாதை

1 Min Read

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (4.1.2026) மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும், மொழிப்போர் தளகர்த்தருமான எல்.கணேசன் காலமானதையொட்டி, தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் க.அன்பழகன், துரை.சந்திரசேகரன், என்.அசோக்குமார், டி.கே.ஜி. நீலமேகம், நா.எழிலன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *