சென்னை, ஜன1 இணையவழி குற்றப்பிரிவு குற்றவாளிகளுக்கு சரித்திரப்பதிவேடு திறக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவின் சாதனைகள் குறித்து சென்னை யில் உள்ள இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இணையம், ஸ்மார்ட்போன் கள் மற்றும் சமூக ஊடகங்களின் விரைவான வளர்ச்சியுடன், இணைய வழி நிதி மோசடி, முதலீட்டு மோசடிகள், டிஜிட்டல் கைது மோசடிகள், ஆள் மாறாட்ட மோசடிகள் போன்ற குற்றங்கள் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன.
வேகமாக வளர்ந்து வரும் சைபர் குற்றங்களை திறம்பட எதிர்கொள்ள, இணையவழி குற்றப்பிரிவு ஒரு பன்முகத் தன்மை கொண்ட யுக்தியை பயன்படுத்துகிறது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கைது நடவடிக்கைகள் விரைவில் வங்கிப் பணம் முடக்கம் ஆகிய வற்றை உள்ளடக்கியது.
