புதுடில்லி, டிச.30 காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் 140ஆவது ஆண்டு நாள் 28.12.2025 அன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டில்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியேற் றினார். இதன் பின் நடைபெற்ற நிகழ்ச் சியில் பங்கேற்ற கார்கே பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட இந்த நாளில் (28.12.2025) காங்கிரஸ் கட்சி முடிந்துவிட்டது என சொல் பவர்களுக்கு நான் ஒன்றை கூறிக் கொள்கிறேன். எங்கள் வலிமை குறை வாக இருக்கலாம். ஆனால் எங்கள் முதுகெழும்பு நேராக உள்ளது. நாங்கள் அரசியலமைப்பு சாசனம், மதச்சார்பின்மை, ஏழைகளின் உரிமை களில் சமரசம் செய்யவில்லை. காங் கிரஸ் என்பது ஒரு சித்தாந்தம். சித்தாந் தம் அழியாது. கோவில், மசூதி பெயரில் காங்கிரஸ் வெறுப்பை பரப்பாது’ என்றார்.
