வாஜ்பேயி பெயரால் உணவகம்; ஆனால், வாஜ்பேயி படம் கிடையாது! எல்லாம் மோடி மயம்தான்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச. 30  மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயின் பிறந்த நாளான டிசம்பர் 25-ஆம் தேதி, டில்லியில் ஏழை, எளிய மக்க ளுக்காக குறைந்த விலையில் உணவு வழங்கும் ‘‘அடல் கேண்டீன்’’ (Atal Canteen) திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கியது. தமிழ்நாட்டின் ‘அம்மா உணவகம்’ போன்ற இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

வாஜ்பேயி பெயரில் திட்டம் –
மோடி பட மயம்

இந்தத் திட்டம் அடல் பிகாரி வாஜ் பேயின் நினைவாகவும், அவர் பெயரிலும் தொடங்கப்பட்டது. ஆனால், டில்லியில் திறக்கப்பட்டுள்ள இந்த உணவகங்களில் எங்குமே வாஜ்பேயின் உருவப்படம் இடம்பெறவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. உணவகத்தின் முகப்பு, உட்புறச் சுவர்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் என அனைத்து இடங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் படங்கள் மட்டுமே பிரமாண்டமாக இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

வாஜ்பேயின் மருமகன் ஆதங்கம்

இதுகுறித்து அடல் பிகாரி வாஜ்பே யின் மருமகன் ஊடகங்களிடம் தனது அதி ருப்தியைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ‘‘அடல் பிகாரி வாஜ்பேயி அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட இந்த உணவ கங்களில், குறைந்தபட்சம் ஒரு ஓரத்தில் கூட அவரு டைய படம் இடம்பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. எல்லா இடங்களிலும் பிரதமர் மோடியின் படங்கள் மட்டுமே ஆக்கிரமித்துள்ளன. இது குறித்து இதற்கு மேல் கருத்துத் தெரிவிக்க நான் விரும்ப வில்லை’’ என்றார்.

அரசியல் சர்ச்சை

வாஜ்பேயி பா.ஜா.க.வின் மூத்த தலை வராகவும், நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது பெற்றவராகவும் இருந்தும், அவர் பெயரிலான திட்டத்திலேயே அவர் புறக்கணிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும், அரசுத் திட்டங்களில் தனிநபர் விளம்பரம் முன்னிறுத்தப்படுவதாக விமர்சித்து வருகின்றனர்.

அடையாள அரசியலால்…

இருப்பினும், இதுகுறித்து ஒன்றிய அரசுத் தரப்பிலிருந்து இதுவரை அதி காரப்பூர்வ  விளக்கம் ஏதும் அளிக்கப்பட வில்லை. ஏழைகளுக்கான இந்தத் திட்டம் அதன் நோக்கத்திற்காகப் பாராட்டப்பட்டாலும், அடையாள அரசிய லால் தற்போது பேசுபொருளாக மாறி
யுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *