சென்னை, ஏப். 27- கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகா ரத்தில் விரிவான கொள்கை வகுத்து, உள் விசாரணைக் குழுவில் மாணவிகள் மற்றும் பெற்றோர் தரப்பு பிரதிநிதிகளையும் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சென்னை கலா ஷேத்ரா அறக் கட்டளை வளாகத்தில் உள்ள ருக் மணி அருண்டேல் கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட் டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான உள்விசாரணை குழுவில் கலாஷேத்ரா அறக் கட்டளை இயக்குநர் ரேவதி ராமச் சந்திரன் இடம் பெறக் கூடாது என்றும், அக் குழுவில் மாணவிகள், பெற்றோர் தரப்பு பிரதிநிதிகளை சேர்க்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 7 மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி எம்.தண்ட பாணி நேற்று (26.4.2023) பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு:
பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்பு சட் டம், போக்சோ சட் டம், பல்கலைக்கழக மானியக் குழுசட்டம் உள்ளிட்ட சட்ட விதிக ளின் கீழ் பாலியல் தொல்லை களை தடுக்க, கலா ஷேத்ரா அறக் கட்டளை சார்பில் நடத் தப்படும் கல்வி நிறுவனங் களில் விரிவான கொள்கை களை வகுக்க வேண் டும்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கலாஷேத்ரா அறக் கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உள்விசாரணை குழுவில் மாணவிகள் மற்றும் பெற்றோர் தரப்பு பிரதிநிதிகளை சேர்க்க வேண் டும்.
அத்துடன் இந்த உள்விசாரணை குழுவில் யார் யார் உள்ளனர் என்ற விவரங்களை நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதர வாக உள்ள ஆசிரியர் களுக்கு எதிராக எந்த நடவடிக் கையும் எடுக்கக் கூடாது.
நிலுவையில் உள்ள இந்த வழக்கு, காவல் துறை விசாரணைக்கோ, இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி கண்ணன் குழு வுக்கோ தடையாக இருக் காது.
இவ்வாறு உத்தர விட்ட நீதிபதி, விசார ணையை ஜூன் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.