ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் ரத்துக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்திற்கு கார்கே அழைப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச. 28– ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் ரத்துக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்திற்கு கார்கே அழைப்பு விடுத்துள்ளார்

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நாடு தழுவிய மக்கள் பிரசாரம் தேவை என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழு கூட்டம் 27.12.2025 அன்று கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கார்கே பேசியதாவது:-

* ஜனநாயக உரிமையை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த திட்டமிட்ட சதி வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தம்.

* ஜனநாயகம், அரசியலமைப்பு, மக்கள் உரிமை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்த கூட்டம் கூட்டப்படு கிறது.

* UPA அரசால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் {Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)} உலக நாடுகளால் பாராட்டை பெற்றது. இந்த திட்டம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக மகாத்மா காந்தி எனப் பெயரிடப்பட்டது.

* மோடி அரசு எந்தவித ஆய்வும் இன்றி, மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் மதிப்பீடு அல்லது ஆலோசனை செய்யாமல் சட்டத்தை ரத்து செய்துள்ளது. இதை மூன்று விவசாய சட்டங்களை போன்று செய்துள்ளனர்.

* இந்த சட்டம் ரத்துக்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் தேவை. நாடு முழுவதும் அரசு நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தப் பட வேண்டும். 2015 நிலம் கையப் படுத்துதல் சட்டத்திற்கு எதிரான போராட்டம் போன்று தேவை.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) குறித்து உறுதியான திட்டங்களைத் தீட்டுவதும், நாடு தழுவிய மக்கள் பிரச்சாரத்தைத் தொடங்குவதும் நமது கூட்டுப் பொறுப்பாகும்.

* வங்கதேசத்தில் இந்து மைனாரிட்டிகள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கி றேன். இது ஒட்டுமொத்த நாட் டையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

* கிறிஸ்துமஸ் அன்று நடத்தப்பட்ட தாக்குதல் சமூக நல்லிணக்கத்தை குலைத்ததுடன், உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு கார்கே பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *