100 நாள் வேலைத் திட்டத்தில் குழப்பம் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் ப.சிதம்பரம் கருத்து

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுக்கோட்டை, டிச.27 புதுக் கோட்டையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் தலைமை தி.மு.க.வுடன் கூட்டணி பேசுவதற்கு குழு அமைத்துள்ளது. அந்த குழு ஏற்ெகனவே முதல்-அமைச்சருடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தி.மு.க. பேச்சுவார்த்தை குழு அமைத்தவுடன் கூட்டணி தொடர் பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும். விஜய் வருகை தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்று என்னிடம் கேட்காதீர்கள். எங்களுடைய தலைமை தி.மு.க.வோடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளது அதை நாங்கள் செயல்படுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. உயிருடன் உள்ள 13 பேர் பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல பகுதிகளில் உயிருடன் இருப்பவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள் ளனர். 66 லட்சத்து 44 ஆயிரம் பேர் முகவரி இல்லாமல் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறி இருப்பது நம்பும்படியாகவா உள்ளது. எப்படி முகவரி இல்லாமல் இருக்க முடியும்?.

ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்துள்ள 100 நாள் வேலை திட்டம் தொடர்பான சட்டம், மாநில அரசுக்கு நிதி சுமையை ஏற்படுத் தும். 100 நாள் வேலை திட்டத்தை அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்தபோது நாடு முழு வதும் வேலை நடப்பது போன்று அறிவித் திருந்தோம். ஆனால் தற்போது அறிவித்துள்ள திட்டத்தில் பல மாநிலங்களுக்கு வேலையே இருக்காது. தேர்தலில் இந்த திட்டம் தலையாய பிரச்சினையாக பா.ஜனதாவிற்கு உருவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *