சென்னை, டிச. 23- தமிழ்நாட்டில் வீசிய டிட்வா புயல் மற்றும் பெய்த கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது, அந்தத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பல்கலைக் கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் பாதிப்பால் நடைபெறாமல் இருந்த தேர்வுகள் வரும் ஜனவரி 20, 2026 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்வு கால அட்டவணை
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மற்றும் அவை மாற்றப்பட்டுள்ள புதிய தேதிகளின் விவரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது முதலில் திட்டமிடப்பட்ட தேதி (2025), மாற்றப்பட்டுள்ள புதிய தேதி (2026) நவம்பர் 24 – ஜனவரி 20, நவம்பர் 28 – ஜனவரி 21, நவம்பர் 29 – ஜனவரி 22, டிசம்பர் 02 – ஜனவரி 23, டிசம்பர் 03 – ஜனவரி 24.
நேரம்: தேர்வு நடைபெறும் நேரம் மற்றும் முன்னரே ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடங்கள் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த அறிவிப்பு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட புயல் மழையால் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களில் உள்ள இணைப்புக் கல்லூரிகளுக்குப் பொருந்தும்.
மாணவர்கள் கூடுதல் விவரங்களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளமான coe.annauniv.edu என்ற முகவரியை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
