திருச்சி சுப்ரமணியபுரம், ஹைவேஸ் காலனியில் வசித்து வந்த திருச்சி மாநகர திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பெரியார் பெருந்தொண்டருமான சி.மருதை (வயது 83) அவர்கள் இன்று (23.12.2025) அதிகாலை உடல் நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அரசுப் பணியில் இருந்தபோதும், இயக்கப் பணிகளில் ஈடுபாடு கொண்டவராய் விளங்கினார். பணி ஓய்வுக்குப் பிறகும், திருச்சி மாநகர திராவிடர் கழகத் தலைவராக சிறப்பாகப் பணியற்றிய கருஞ்சட்டை வீரர்.
இன்று மாலை 3மணிக்கு அவரது இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்திய பிறகு அவரது விருப்பத்தின் பேரில் அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்படுகிறது.
மறைந்த சி.மருதைக்கு சுசிலா என்ற மனைவியும், மகன் அன்பழகன், மருமகள் மோனிஷா தேவி, மகள் சுமதி, மருமகன் ராஜேஷ், பேரப்பிள்ளைகள் இனியன், கவியாழினி, எழில்வேந்தன், மகிழினி ஆகியோர் உள்ளனர்.
தோழர் மருதையின் பிரிவால் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
23.12.2025
குறிப்பு: சி. மருதையின் மகன் ம. அன்பழகனிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருதையின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
