தமிழ்நாடு தனி வழியில், தனி திசையில் இன்று பயணிக்கிறது என்றால் அதற்கு அடித்தளம் இட்டவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். ‘தமிழ்நாட்டின் அழகிய முகம்’ என்ற பாடலும் அவரைப்பற்றி உண்டு. சிலர் அவரை கடவுள் மறுப்பாளர் என்பதை மட்டுமே முன்னிறுத்துவது உண்டு. ஆனால் அதைத் தாண்டி, ‘சமூக சமத்துவ போராளி’ என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதனுக்கு மனிதன் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அவருடைய முக்கிய கொள்கை. சுயமரியாதை அவருடைய கொள்கைகளில் மிக முக்கியமானது.
பெண் விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என்று எல்லாவற்றையும் கையில் எடுத்தார். அவர் ஒரு முகம் அல்ல; பன்முகம் கொண்டவர். ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், அவர் மானுடத்தை நேசித்தார். மொழிப் பற்று, இனப் பற்று, பாலினப் பற்று, நாட்டுப்பற்று இவற்றையெல்லாம் விட மானுடப் பற்று தான் அவருக்கு பிரதானம்.
‘மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு’ என்றார். இவற்றையெல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிந்தித்து செயல்பட்டவர் பெரியார். பெண் விடுதலையைப் பற்றி அவரைப் போல செய்திகள் சொன்னவர் புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே. அனைவராலும் பெரியார் வாசிக்கப்பட வேண்டியவர்.
அவரை ஜாதி மறுப்பாளர், மத எதிர்ப்பாளர் என்று எளிதாக ஒதுக்கி விட முடியாது. தமிழ்நாட்டில் இன்று மத நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள் என்றால் அதற்கு பெரியாரின் சமத்துவ சிந்தனைகள்தான் காரணம். இந்த விதமாக மேலும் பேசிய ஒருவரின் கருத்து தமிழர்களுக்கு சுயமரியாதை கற்றுத் தந்தவர் பெரியார் என்ற பெயரில் Periyar Vision OTT-இல் வெளியாகி இருக்கிறது. இன்றே காணுங்கள். சிந்தித்து மகிழுங்கள்.
– டி.விஜய மாலா, திருவனந்தபுரம்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com

