“இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வை அன்றே சொன்ன பெரியார்” என்று சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த ஒரு வாசகி ஒருவரின் நெகிழ்ச்சியான கருத்துகளை அழகாகச் சொல்லி இருப்பதை Periyar Vision OTTஇல் கேட்டேன். ஆண், பெண் வித்தியாசம், ஜாதி, மத பாகுபாடு, மொழி, இன வேறுபாடு பற்றி தீர்க்க தரிசனமாக பல ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் பேசியதையும், எழுதியதையும் நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மக்கள் சிந்தித்து சமநிலை, சம உரிமை அடைந்து வரும்போது எனது பெயர் தேவைப்படாமல் போவதையே பெரியார் விரும்புகிறார் என்பதை அவருடைய புத்தகங்களை கடந்த நான்கு ஆண்டுகளாக படித்து தெரிந்து கொண்டேன் என்று கூறுகிறார். மேலும் அந்தப் பெண் வாசகர் கூறிய தகவல்களை கேட்டு அறிய பெரியார் வலைதள காணொளி காட்சியை இன்றே பாருங்கள்
– எம்.கோதைநாயகி, ஊத்துக்கோட்டை
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com
