இதுதான் மதச்சார்பின்மையா? அரசமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதிப்பதா? அரசுப் பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பு கட்டாயம் உத்தரகாண்ட் பிஜேபி அரசு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டேராடூன், டிச.22 உத்தர காண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளி லும் பகவத் கீதையின் வாச கங்களை வாசிப்பதை கட்டாய மாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களி டையே இந்திய கலாச்சாரம், தார்மீக விழுமியங்கள், சுய ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்ப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, உத்தர காண்ட் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், “சுமார் 17,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க் குமாறு NCERT-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது செயல்படுத்தப்படும் வரை, பள்ளிகளில் அன்றாட பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதை மற்றும் ராமாயணத் தின் வசனங்கள் சேர்க்கப்படும்” என்றார்.

உத்தரகாண்ட் அரசின் இந்த புதிய உத்தரவுபடி, பள்ளி களில் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது அன்றாடம் ஒரு பகவத்கீதை ஸ்லோகம் வாசிக்கப்பட வேண்டும். ஸ்லோகத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பொருள் மற்றும் அதன் அறிவியல் ரீதியான தொடர்பு குறித்து மாணவர் களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.

இதுமட்டுமின்றி ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட ஸ்லோகம் (Shloka of the Week) தேர்ந்தெடுக்கப்பட்டு, அது பள்ளி அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தப்படும். ஒவ் வொரு வாரத்தின் முடிவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வசனம் வகுப்பறைகளில் விவா திக்கப்படும். மேலும் மாணவர் களின் கருத்துக்கள் சேகரிக்கப் படும். இது மாணவர்களிடம் புரிதலையும், ஈடுபாட்டையும் ஆழப்படுத்த உதவும் என அம்மா நில அரசு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு அம்மாநில கல்வித்துறைகள் பலவும் ஆதரவு தெரிவித்துள் ளன. உத்தரகண்ட் மதர்சா கல்வி வாரியத் தலைவர் முஃப்தி ஷாமூன் காஸ்மி இந்த முடிவை வரவேற்று, “ராமன் மற்றும் கிருஷ்ணன் இருவரும் நமது மூதாதையர்கள், ஒவ்வொரு இந்தியரும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம்” என்று கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *