இதுதான் பிஜேபியின் தேர்தல் ப(£)ணி: வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜேடிஎஸ் வேட்பாளருடன் பா.ஜ.க. அமைச்சர் சோமண்ணா பேரம்!

Viduthalai
4 Min Read

அரசியல்

பெங்களூரு, ஏப். 29- கருநாடகா சட்டசபை தேர்தலில் வருணா தொகுதியில் காங்கிரஸ் கட்சி யின் மேனாள் முதலமைச்சர் சித்தராமையாவை எதிர்த்து பாஜக அமைச்சர் சோமண்ணா போட்டியிடுகிறார். 

இதே போல் சாம்ராஜ்நகர் தொகுதியில் சோமண்ணா களமிறங்கி உள்ள நிலையில் தோல்வி பயத்தில் வேட்பு மனுவை திரும்பப் பெற வேண் டும் என அவர் ஜேடிஎஸ் வேட் பாளரிடம் வற்புறுத்தியதாக ஒலிப்பதிவு ஒன்று வேகமாக பரவி வருகிறது. மேலும் மனுவை திரும்ப பெறுவதற்காக அவர் ரூ.50 லட்சம் மற்றும் கார் தருகிறேன் என தெரிவித் துள்ளதாகவும் கூறப்படுகிறது. கருநாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ஆம் தேதி நடை பெற உள்ளது. இதில் முதல மைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சர வையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக உள்ள சோமண்ணா பாஜக சார்பில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மேனாள் முதலமைச்சர் சித்தராமையாவை எதிர்த்து சோமண்ணாவை மைசூர் மாவட்டம் வருணா தொகுதி யில் பாஜக களமிறக்கி உள்ளது. அதேபோல் சோமண்ணா சாம்ராஜ்நகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.மேனாள் முதலமைச்சரை எதிர்ப்பதால் அவருக்கு 2 இடங்களில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது.

சோமண்ணா தற்போது பெங்களூர் கோவிந்தராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பன ராக உள்ளார். அவர் இந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டாலும் கூட சொந்த தொகுதியான கோவிந்த ராஜ் நகர் தொகுதியை கைவிட்டு விட்டார். வருணா தொகுதி என்பது சித்தராமை யாவின் சொந்த தொகுதியாகும். இங்கு சோமண்ணா வெற்றி பெறு வது சிரமம் என கூறப் படுகிறது. அதேபோல் சாம் ராஜ் நகர் தொகுதியில் அவர் முதல் முறையாக போட்டியிடுகிறார். இதனால் அங்கும் அவரது வெற்றி என்பது சந் தேகம் தான் என கூறப்படுகிறது. இருப்பினும் சாம்ராஜ் நகர் மாவட்ட பொறுப்பு அமைச்ச ராக சோமண்ணா செயல்பட்ட நிலையில் அது தனக்கு கைக் கொடுக்கும் என சோமண்ணா நம்புகிறார்.

இந்நிலையில் தான், 2 தொகுதிகளிலும் சோமண்ணா தீவிர பிரசாரம் செய்து வரு கிறார். வருணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சித்த ராமையா, அமைச்சர் சோமண்ணா இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல் சாம்ராஜ் நகர் தொகுதியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் வேட்பாளர் புட்டரங்க செட்டி, ஜேடிஎஸ் வேட்பாளர் மல்லிகார்ஜூன சாமி மற்றும் பாஜகவின் சோமண்ணா ஆகியோர் இடையே போட்டி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாளான கடந்த 24ஆம் தேதி அமைச்சர் சோமண்ணா, சாம் ராஜ்நகர் தொகுதி ஜேடிஎஸ் வேட்பாளர் மல்லிகார்ஜூன சாமியின் மனுவை திரும்ப பெற வலியுறுத்தி பேரம் பேசிய தாக கூறி ஒலிப்பதிவு பரப்பப் பட்டு வருகிறது. அந்த ஒலிப் பதிவு அமைச்சர் சோமண்ணா மற்றும் மல்லிகார்ஜூன சாமிக்கு இடையே நடந்த உரையாடல் என கூறப்படு கிறது. அதில், மல்லிகார்ஜூன சாமியிடம் “நீங்கள் தேர்தலில் மனுவை திரும்பப் பெற்று பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என கூறப்படுகிறது. அதற்கு மல்லிகார்ஜூன சாமி, நான் திரும்ப பெறமாட்டேன்” என்கிறார். 

இதையடுத்து, யாருடைய பேச்சையும் கேட்க வேண்டாம். வேட்புமனுவை மட்டும் திரும்ப பெறுங்கள். உங்களின் எதிர்காலத்தை நான் பார்த்து கொள்கிறேன். இந்த உறுதியை நான் உப்பார் கோவிலின் உள்ளே இருந்தபடி கொடுக்கி றேன்” எனும் வகையில் உரை யாடல் உள்ளது. இது கர்நா டகா அரசியலில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் அமைச் சர் சோமண்ணா இதுபற்றி எதுவும் விளக்கம் அளிக்க வில்லை. இருப்பினும் சாம்ராஜ்நகர் தொகுதி ஜேடிஎஸ் வேட் பாளர் மல்லிகார்ஜூன சாமி ஒலிப்பதிவு ஒன்று வெளியிட் டுள்ளார். அதில் அமைச்சர் சோமண்ணா வேட்புமனுவை வாபஸ் வாங்கும்படி தன்னிடம் பேரம் பேசியதாக குற்றம் சாட்டி உள்ளது. 

இதுபற்றி மல்லிகார்ஜூன சாமி கூறுகையில், சோமண்ணா எனக்கு போன் செய்து வேட்புமனுவை திரும்ப பெற கூறினார். நான் மறுத்துவிட் டேன். அவர் என்னுடன் பேசியது உண்மை தான். இந்த தேர்தலில் நான் சோமண்ணா வுக்கு எதிராக வெற்றி பெறு வேன். ஏனென்றால் அமைச்சர் சோமண்ணா வெளிநபராவார்” என தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த வேளையில் ரூ.50 லட்சம் மற்றும் அரசு கார் வழங்குவதாகவும் சோமண்ணா, மல்லிகார்ஜூன சாமிக்கு ஆபர் கொடுத்துள்ள தாக அவர் தெரிவித்துள்ளார்.

வேட்பாளராக களமிறங்கி உள்ள மல்லிகார்ஜூன சாமி கடந்த முறையும் ஜேடிஎஸ் கட்சி சார்பில் சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட் டார். இந்த தேர்தலில் 7 ஆயி ரம் ஓட்டுக்களை பெற்றார். இந்த முறையும் அவர் போட்டியிடும்பட்சத்தில் அவர் ஓட் டுக்களை பிரிப்பார். இதனால் தோல்வி பயத்தில் அமைச்சர் சோமண்ணா மல்லிகார்ஜூன சாமியிடம் பேசியுள்ளதாக தக வல்கள் வெளியாகி உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *