இந்திய வாகனக் கம்பெனிகளுக்கு பலத்த அடி மெக்சிகோ எடுத்த முடிவால் தலைகீழாக மாறும் நிலை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.17- ஏற்கெனவே உற்பத்திக்குத் தேவையான பொருள்களின் தட்டுப்பாடு காரணமாக இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தன. தற்போது இந்த பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், தற்போது புதிய பிரச்சினை மெக்சிகோ வழியாக வந்திருக்கிறது. 50 சதவீதம் வரை மெக்சிகோ வரியை விதிக்க இருப்பதால் இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள உள்ளன.

இந்த வரி அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எந்தெந்த நாடுகளுடன் ‘தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்’ இருக்கிறதோ, அந்த நாடுகளை தவிர மற்ற நாடுகள் அனைத்துக்கும் 5-50 சதவீதம் வரை விதிக்கப்படுவதாக மெக்சிகோ தெரிவித்திருக்கிறது. மெக்சிகோவுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இல்லை. எனவே இந்தியாவுக்கும் வரி உண்டு. இந்தியா மட்டும் கிடையாது சீனாவும் இந்த ஒப்பந்தத்தில் இல்லை. எனவே சீனாவும் பாதிக்கப்படும்.

மெக்சிகோவுக்கு
என்ன பிரச்சினை?

சீனாவை டார்கெட் செய்யவே இந்த வரியை மெக்சிகோ கொண்டு வருகிறது. அதாவது சீனாவிலிருந்து வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்டவை மலிவான விலையில் மெக்சிகோவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த உதிரி பாகங்களை வாங்கி, அதை அசெம்பிள் செய்து அமெரிக்காவுக்கு அந்நாடு ஏற்றுமதி செய்கிறது. ஆக, சீனா மெக்சிகோ வழியாக எங்கள் நாட்டிற்குள் நுழைவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று டிரம்ப் கூறியுள்ளார். சீனாவுக்கு எதிராக நடவடிக்கையை நாங்கள் எடுப்பதற்குள் மெக்சிகோ எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார். இதனையடுத்து தற்போது புதிய வரி போடப்பட உள்ளது.

அமெரிக்காவின் நெருக்கடி

மற்றொரு காரணம் அமெரிக்கா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தம் 2026இல் மறுபரிசீலனைக்கு வரவுள்ளது. சீனாவை காரணம் காட்டி அமெரிக்கா மெக்சிகோவை கழற்றிவிடலாம். எனவே அதற்கு முன்னதாகவே சீனாவுக்கு செக் வைக்கும் விதமாக வரி நடவடிக்கையை மெக்சிகோ மேற்கொண்டிருக்கிறது. சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவுடன் துணை நிற்பேன் என்பதை வாசிங்டனுக்கு தெளிவாக உணர்த்தவே மெக்சிகோ இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

இந்தியாவுக்கு பாதிப்பு

இதெல்லாம் சரிதான். ஆனால், இதனால் பாதிக்கப்படப் போவது சீனா மட்டும் கிடையாது. இந்தியாவுக்கு, குறிப்பாக இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். 2024ஆம் ஆண்டில் இந்தியா மெக்சிகோவுக்கு 5.3 பில்லியன் டாலர்(47,920 கோடி ரூபாய்) மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது, இதில் வாகனங்கள் மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர்(9,041 கோடி ரூபாய்) மதிப்புடையவை. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ 3ஆவது இடத்தில் இருக்கிறது.

ஆட்டோமொபைல்

ஏற்கெனவே 20 சதவீத வரி இந்தியா மீது இருக்கிறது. இந்நிலையில் மேலும் 50 சதவீத வரி எனில் கார் ஏற்றுமதி லாபகரமான தாக இருக்காது. ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவின் மொத்த வாகன ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 50 சதவீதம் மெக்சிகோவுக்கு செய்கிறது. ஹூண்டாய் சுமார் 200 மில்லியன் டாலர் (1,808 கோடி ரூபாய்) மதிப்புள்ள வாகனங்களையும், நிஸ்ஸான் 140 மில்லியன் டாலர் (1,266 கோடி ரூபாய்) மதிப்புள்ள கார்களையும், சுஸுகி 120 மில்லியன் டாலர் (1,085 கோடி ரூபாய்) மதிப்புள்ள வாகனங்களையும் ஏற்றுமதி செய்கிறது. ராயல் என்பீல்டு, டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ஹோண்டா போன்ற இருசக்கர வாகன நிறுவனங்களும் மெக்சிகோவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.

டாடா ஸ்டீல்

ஆண்டுக்கு சுமார் 600 முதல் 700 மில்லியன் டாலர்(6,329 கோடி ரூபாய்) மதிப்புள்ள வாகன உதிரிபாகங்கள், 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான வரிவிதிப்பால் பாதிக்கப்படும். ஆண்டுக்கு சுமார் 900 மில்லியன் டாலர் (8,137 கோடி ரூபாய்) மதிப்புள்ள இரும்பு மற்றும் எஃகு ஏற்றுமதிகள் இப்போது 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான வரியைச் சந்திக்கும், இது டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்களுக்குக் கடுமையான அடியாக இருக்கும்.

மருந்துப் பொருட்கள்

ஆட்டோமொபைல் துறை மட்டுமல்லாது, சுமார் 500 முதல் 600 மில்லியன் டாலர் (5,425 கோடி ரூபாய்) மதிப்புள்ள ஜவுளி, ஆடை மற்றும் காலணி ஏற்றுமதியும் இந்த வரியால் பாதிப்புக்கு உள்ளாகும். வரி காரணமாக உயர் ரக, குறிப்பிட்ட சந்தைப் பொருட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். சுமார் 400 மில்லியன் டாலர் (3,616 கோடி ரூபாய்)மதிப்புள்ள கரிம ரசாயனங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கும்.

மொத்தத்தில், கடந்த ஆண்டு இந்தியா மெக்சிகோவுக்கு கிட்டத்தட்ட 8.9 பில்லியன் டாலர் (80,470 கோடி ரூபாய்) மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. ஆனால், புதிய வரி மேற்குறிப்பிட்ட துறைகளில் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை சரிவை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *