இதோ ஒரு சுயமரியாதை வீராங்கனை! ‘பேராசை பிடித்தவன் வேண்டாம்’ தாலி கட்டும் நேரத்தில் ரூ.20 லட்சம், கார் கேட்ட மாப்பிள்ளையை விரட்டிய சிங்கப்பெண்!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பரேலி, டிச.15- உத்தரப் பிரதேசம் மாநிலம், பரேலியில் 12.12.2025 அன்று இரவு நடந்த திருமண விழாவில், திருமணச் சடங்குகளுக்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், மணமகன் கார் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கம் கேட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மணமகள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் இருவரை காவல் துறையினர் காவலில் எடுத்தனர்.

ஊடகச் செய்தியின்படி, சதார் பஜார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மணமகன் ரிஷப் (ஒரு தொழிலதிபர்), 12.12.2025 அன்று இரவு தாமதமாக யுக்வீனா நூலகம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக (பாரத்) வந்தார். மணமேடை சடங்குகளுக்கு சற்று முன்பு, அவர் ஒரு பிரெஸ்ஸா கார் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கம் கேட்டதாகவும், தான் கேட்டதைக் கொடுக்காவிட்டால் திருமணத்தை நிறுத்திவிடுவதாக மிரட்டியதாகவும் மணப்பெண் வீட்டார் குற்றம் சாட்டினர்.

காட்சிப் பதிவு

மணப்பெண் தனது வேதனையைப் பகிர்ந்து கொள்ளும் காட்சிப் பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ‘வரதட்சணை பேராசை பிடித்த இவர்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை’ என்று அவர் அந்த பதிவில் கூறியுள்ளார். மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகனிடம் பலமுறை எடுத்துச் சொல்ல முயன்றும் தோல்வியடைந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நாங்கள் அவரை எங்கள் மகனைப் போல நடத்தினோம், அவரிடம் கெஞ்சினோம், ஆனால், அவர் பிடிவாதமாக இருந்தார்’ என்று மணமகளின் தந்தை முரளி மனோகர் கூறினார்.

தனது குடும்பத்தின் இயலாமையைக் கண்ட மணமகள் ஜோதி, திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். ‘வரதட்சணை பேராசை பிடித்த இவர்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. என் குடும்பத்தை மதிக்காத இப்படிப்பட்ட ஒருவருடன் என் வாழ்க்கையை கழிக்க முடியாது’ என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார். ‘வரதட்சணைக்காக அனைத்து விருந்தினர்களின் முன்னிலையிலும் என் தந்தையையும் சகோதரனையும் அவமானப்படுத்துபவர், எதிர்காலத்தில் என்னை எப்படி மதிப்பார்? இப்படிப்பட்ட பேராசை பிடித்த நபருடன் நான் திருமண உறுதிமொழி ஏற்க மாட்டேன்.’ என்று கூறியுள்ளார்.

இந்த காட்சிப் பதிவு விரைவாகப் பரவி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. இது பரேலி காவல் துறையினரின் கவனத்தையும் ஈர்த்தது. ‘இந்த விவகாரம் உள்ளூர் காவல் துறையின் கவனத்தில் உள்ளது. விசாரணை மற்றும் தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று பரேலி காவல் துறையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பல பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருவர், ‘திருமணத்தை ரத்து செய்ய வலிமை வேண்டும். பொது வெளியில் உங்கள் பெற்றோரின் கண்ணியத்தைப் பாதுகாக்க இன்னும் அதிக வலிமை தேவை. இதுதான் செயல்பாட்டில் உள்ள பெண்ணியம். உண்மையான பெண் அதிகாரம் என்பது இதுதான், முழக்கங்களில் அல்ல, யதார்த்தத்தில் இதுதான் பெண்ணியம்’ என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், ‘நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன், இந்த வரதட்சணை முறை நிரந்தரமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இரு குடும்பத்தினரும் அமர்ந்து சமமான செலவுகளை முடிவு செய்ய வேண்டும், பெண் வீட்டார் ஏன் அதிக செலவுகளை ஏற்க வேண்டும்’ என்று எழுதியுள்ளார்.

வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அந்த இடத்தில் மோதல் ஏற்பட்டது. கன்டோன்மென்ட் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மணமகன் ரிஷப், அவரது தந்தை ராம் அவதார் மற்றும் அவரது மைத்துனர் ஆகியோரை காவலில் எடுத்தனர். ‘பெண் வீட்டாரிடமிருந்து முறையான புகார் வந்த பிறகு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கன்டோன்மென்ட் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுமார் 8 மாதங்களுக்கு முன்பு சிக்லாப்பூரைச் சேர்ந்த இந்திரபால் என்ற தரகர் மூலம் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக மணமகளின் தந்தை முரளி மனோகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‘திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில், மணமகனின் தந்தை எங்கள் மகளை தேவையான துணியுடன் மட்டும் அனுப்புமாறும், தங்களுக்கு வரதட்சணை வேண்டாம் என்றும் கூறினார்’ என்று அவர் கூறினார்.

மே மாதம் நகரத்தில் உள்ள ஒரு விடுதியில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது என்றும், இதற்காக குடும்பத்தினர் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் செலவிட்டதாகவும் அவர் கூறினார். ‘நாங்கள் மாப்பிள்ளைக்கு ஒரு தங்க மோதிரம், ஒரு சங்கிலி மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கமும் கொடுத்தோம். அதன் பிறகும், அவர்கள் கேட்பது நிற்கவே இல்லை. குறைந்தபட்சம் எங்கள் மகளாவது மகிழ்ச்சியாக இருப்பாள் என்று நினைத்து நாங்கள் அவர்கள் கேட்டதை நிறைவேற்றிக் கொண்டே இருந்தோம்’ என்று மனோகர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமை, திருமண அழைப்பிதழுடன் மணமகன் வீட்டிற்குச் சென்று குளிரூட்டி (ஏ.சி.), குளிர்சாதன பெட்டி, வாசிங் மெசின், வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள் மற்றும் ரூ.1.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பல பொருட்களை ஒப்படைத்ததாக மணமகளின் தந்தை மேலும் கூறினார். ‘திருமண மண்டபமே மிகவும் விலை உயர்ந்தது, ஆனால் மணமகன் வீட்டாரின் வற்புறுத்தலின் பேரில் நாங்கள் அதை முன்பதிவு செய்தோம்’ என்று அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *